சட்டத்தை மீறி குழந்தை!..புதிய சர்ச்சையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..நடந்தது என்ன?...

by சிவா |   ( Updated:2022-10-10 08:35:18  )
nayanthara
X

நடிகை நயன்தாராவுக்கு குழந்தை பிறந்துதான் இப்போது ஹாட் டாப்பிக்காக சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஜூன் மாதம் திருமணம் செய்து, கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தி கூட வெளியாகாத நிலையில், நயனும், விக்கியும் திடீரென எப்படி இருவரும் இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

அதன்பின்னரே, அவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. திரையுலகில் தற்போது இது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார்.

இதையும் படிங்க: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த பிரபலங்களின் விபரம்!..முதலில் அறிமுகம் செய்தது யாருனு தெரியுமா?..

ஒருபக்கம், இது நயன்தாராவின் சொந்த விவகாரம், இதைப்பாற்றி நான் ஏன் விவாதிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நயனும், விக்கியும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதாவது, திருமணம் செய்த தம்பதிக்கு, 5 ஆண்டுகள் குழந்தை இல்லை என்றால்தான் சட்டப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும் என சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, சட்டத்தை மீறி சட்டத்தை மீறியே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி விக்னேஷ் சிவன் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story