விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பிரிந்து விட்டார்கள் என்றே பீதி கிளப்பி விட்டனர். அதெல்லாம் இல்லை, நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க படத்தின் ஷூட்டிங்கிறே விடுமுறை விட்டு விட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் மகளிர் தினத்தை கொண்டாட துபாய்க்கு சென்றுள்ளார் விக்னேஷ் சிவன்.
துபாயில் சரக்கு பார்ட்டியுடன் மகளிர் தினத்தை விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் கொண்டாடியுள்ளார். அதை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக சோஷியல் மீடியாவில் தற்போது ஒயின் கிளாஸில் நயன்தாரா முகம் தெரிவது போல போட்டோ எடுத்து உலகத்துல ரெண்டே விஷயம் தான் வயசாக வயசாக அழகா இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாமே பொய்!.. அஜித்துக்கு இதுதான் பிரச்சனை!. சுரேஷ் சந்திரா என்ன சொல்றார் பாருங்க!…
நயன்தாரா ஓல்டு ஒயினாக மாறிவிட்டார் என விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருப்பதை பார்த்து சார் செம போதையா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். தனது மனைவியுடன் பல நாட்கள் கழித்து சந்தோஷமாக விடுமுறையை கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன் என்றும் கூறுகின்றனர்.
சமீபத்தில், திருமண நாளில் புல்லாங்குழல் நவீனை அழைத்து வந்து “மறுவார்த்தை” பாடலை இசைக்க வைத்து இருவரும் கொஞ்சியதை காண்டாமிருகம் இன்னொரு காண்டமிருகத்தின் மேல் ஏறும் மீமை போட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். தற்போது அடுத்த கன்டென்ட் போல நயன்தாராவை ஓல்டு ஒயின் என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என் புருஷனுக்கு மட்டுமா? எனக்கும் தெரியும்.. வீம்புக்கு செஞ்சி அப்பாவை வம்பில் இழுத்துவிட்ட ஐஸ்வர்யா!..
ஏ ஆர்…
Ayothi: அயோத்தி…
திரைத்துறையில் நடிகர்…
விஜய் டிவியில்…
SK_ Keerthi…