அஜித்தின் அடுத்த படத்தில் நயனுக்கு நோ... வேறு நாயகிக்கு ஓகே சொன்ன விக்னேஷ் சிவன்... என்னவானது?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நயன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் துணிவு. இப்படத்தினை போனி கபூர் தயாரித்து இருக்கிறார். வலிமை சுமார் வசூலை பெற்ற நிலையில், இப்படத்தினை வெற்றி படமாக மாற்றியே தீர வேண்டும் என படக்குழுவினரை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் மற்ற பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜயின் வாரிசு படத்துடன் இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. சில வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒரே ரிலீஸாக இருப்பதால் இப்படங்களுக்கு அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் துணிவு படத்தினை முடித்த பிறகு அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.
லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் இப்படத்தில் நயன் தான் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் நயன் சில காலம் சினிமாவிற்கு ப்ரேக் கொடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு பதில் த்ரிஷா அந்த படத்தில் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.