Cinema News
வெக்கேஷன் போன இடத்துல இப்படி ஒரு சம்பவமா? விக்னேஷ் சிவன் போட்ட பதிவு..அடடா!
Vignesh Shivan Nayan: திருமணம் முடிந்து நான்காண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னும் இளம் தம்பதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையை மிக சந்தோஷமாகவும் ஜாலியாகவும், ரொமான்டிக்காகவும் கழித்து வரும் நட்சத்திர ஜோடிகள் விக்கி மற்றும் நயன். இன்று சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன் தனது இரு குழந்தைகளுடனும் விடுமுறை பயணமாக ஹாங்காங் சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
அது சம்பந்தமான பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் குழந்தைகளுடன் அவர்கள் எங்கே வெளிநாடு பயணம் மேற்கொண்டாலும் கூடவே மூன்று செவிலியர்களையும் உடல் அழைத்து போவதாகவும் ஒரு செய்தி வெளியானது. இப்படி தன் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் இருந்து வருகிறார் நயன்.
இதையும் படிங்க: விஜயோட ப்ராடக்ட்னா சும்மாவா? கவினுக்கு அடித்த அடுத்தடுத்த பம்பர் ஆஃபர்
விடுமுறை பயணம் எல்லாம் முடித்துக் கொண்டு பொழப்ப பாக்க போவோம் என ஊருக்கு திரும்பும் வழியில் திடீரென அவர்கள் புக் செய்த ஏர் இந்தியா விமானம் தாமதமாகி இருப்பதாக விக்கி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறா. அந்த பதிவில் அவர் சில விஷயங்கள் என்றுமே மாறாது என குறிப்பிட்டு எரிச்சல் ஊட்டும் ஏர் இந்தியா தாமதங்கள் என போட்டிருக்கிறார்.
பொதுவாகவே ஏர் இந்தியா நிறுவனம் எப்போதுமே அவர்கள் சேவையில் தாமதமாகி கொண்டிருக்கிறார்கள் என்று பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 18 மணி நேரம் தாமதம் 20 மணி நேரம் தாமதம் என்றெல்லாம் பல செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். அதை சரிவர அவர்கள் இன்று வரை பூர்த்தி செய்யவில்லை. இப்போது அதே மாதிரியான ஒரு பிரச்சினையில் தான் விக்கியும் நயனும் மாட்டி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சூர்யா மீது செம கடுப்பில் சிறுத்தை சிவா?.. கங்குவாவுக்கு அதைக்கூட பண்ண மாட்றாரே என்கிற வருத்தம்!
அதை குறிக்கும் விதமாகத்தான் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறார் விக்கி. ஊருக்கு திரும்பியதும் நயன்தாரா கவின் உடன் இணைந்து ஒரு படத்தில் இணைய இருக்கிறார். விக்னேஷ் சிவன் அவருடைய எல் ஐ சி திரைப்படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். அவரவர் கெரியரில் பிஸியாக இருக்கும் நிலையில் தங்கள் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிட்டு குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை சுமூகமாக இன்று வரை கொண்டு சென்று வருகிறார்கள்.