விக்னேஷ் சிவனை லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பையே ஏற்படுத்திக் கொடுத்தது நயன்தாரா தான். ஆனால், கடைசியில் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஒரு வருஷம் ஜாலி டூர் அடித்து விட்டு தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டியை வைத்து எல்ஐசி டைட்டிலில் படத்துக்கு பூஜை போட்டார்.
பூஜை போட்ட அடுத்த நொடியே அது என் டைட்டில் என இயக்குநர் ஒருவர் லைஃப் இஸ் கலர்ஃபுல் என்கிற பெயரில் LIC டைட்டிலை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என சண்டைக்கு வந்தார்.
இதையும் படிங்க: வயசு பசங்க நிலைமை ரொம்ப பாவம்!.. மொத்த அழகையும் பனியனில் காட்டும் தர்ஷா குப்தா..
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாக உள்ள LIC படத்துக்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்றே டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், ஒரிஜினல் ஓனரான LIC நிறுவனமே தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எங்களுடைய நிறுவனத்தின் பெயரை டேமேஜ் செய்யும் விதமாக இந்த படத்தின் தலைப்பு உள்ளது என்றும் நோட்டீஸ் பெற்ற 7 நாட்களில் படத்தின் தலைப்பை மாற்றவில்லை என்றால் பிரச்சனை பெரிதாகும் என்றும் எல்ஐசி நிறுவனம் ஸ்ட்ராங்காக எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கேப்டனுக்கு அப்புறம் ஒரே வருடத்தில் 13 படங்கள்! இவரெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே – யார் அந்த நடிகர் தெரியுமா?
இந்த டைட்டிலும் நயன்தாராவுக்கு ரொம்பவே பிடித்த டைட்டில் என்பது தான் கூடுதல் சிறப்பு. என்ன விக்னேஷ் சிவனுக்கு தொடர்ந்து எதை தொட்டாலும் அடி மேல் அடி விழுகிறதே என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களே பேசிக் கொள்கின்றனர்.
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…