Categories: Cinema News latest news

விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நேரம் சரியில்ல…! ஜோசியம் சொல்லும் நெருங்கிய உறவினர்…..

நேற்று சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல், தமிழக சேனல்களிலும் தலைப்பு செய்தியாக ஒலித்து கொண்டிருந்தது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிதான். அந்த அளவுக்கு இவர்களது திருமணம் இந்தியா முழுக்க பரவலாக பேசப்பட்டு வந்தது.

Also Read

இந்த திருமண விழாவிற்கு ரஜினிகாந்த், போனிகபூர், கார்த்தி, அனிருத் என பல்வேறு திரை பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர். இந்த விழாவில் விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான திருச்சி, லால்குடியிலிருந்து முக்கியமான நபர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து, சிறுவயதிலிருந்தே விக்னேஷ் சிவனின் வளர்ச்சியை பார்த்து வரும் அவரது பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் அண்மையில் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தனர். அப்போது அவரது பெரியப்பா மாணிக்கம் அவர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது, இவர்களது திருமணம் காலை 8 மணி முதல் 9.30க்குள்  முகூர்த்தம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் தாலி கட்டியது 10.20 மணிக்கு தான். அந்த சமயம் என்பது குளிகை நேரம். அது தாலி கட்டும் நேரம் அல்ல. அந்த நேரம் நல்லதல்ல.’ என கூறியிருந்தார். மேலும், தங்களை விக்னேஷ் சிவன் அழைப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கடைசிவரை விக்னேஷ் சிவன் அழைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதையும் படியுங்களேன் – செய்த தவறை திருத்தி கொண்ட சிவகார்த்திகேயன்.!? வெளியான போட்டோவை நீங்களே பாருங்க…

மேலும், விக்னேஷ் சிவனின் பெரியம்மா பிரேமா கூறுகையில், ‘ விக்னேஷ் சிவன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்கிறார். அவர் எங்களை கூப்பிடுவார் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் சொந்தக்காரர்கள் யாரையும் கூப்பிடவில்லை. அதேபோல் குலதெய்வ கோவிலுக்கு வந்தவர் எங்களிடம் சொல்லவே இல்லை. நயன்தாரா எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தது எங்களுக்கு சந்தோஷம்தான்.’ என்றும் அவர் வருத்தத்துடன் பேசியிருந்தார்.

Published by
Manikandan