எனக்கு கிடைச்ச வாய்ப்பு!.. பிரச்சினை அங்க இல்ல?.. ஏகே 62 பற்றி வாய்திறந்த விக்னேஷ்சிவன்!..

ajith
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ்சிவன். ‘ நானும் ரௌடிதான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘போடா போடி’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர்.
நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின் சொல்லும் படியாக எந்த வாய்ப்பும் அவரை தேடி வரவில்லை. வந்த பெரிய வாய்ப்பும் நிலைத்து நிற்கவில்லை.

திருமணத்திற்கு முன்பே அஜித்துடன் அடுத்த படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அஜித்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.
ஆனால் ஏதோ சிலவித பிரச்சினைகளால் ஏகே 62 படம் விக்னேஷ் சிவனால் கைவிடப்பட்டது. லைக்கா நிறுவனமும் விக்னேஷ் சிவன் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்கிரிப்ட்டில் சொதப்பி விட்டார் என்றும் பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.

ஏகே 62படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதில் இருந்து அந்த படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் பொது இடங்களில் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கலாட்டாவிற்கு அளித்த பேட்டியில் முதல் முறையாக ஏகே 62 பற்றி வாய் திறந்துள்ளார்,
இதையும் படிங்க : சினிமால எல்லோரும் பண்றாங்க! நான் பண்ணா மட்டும் தப்பா.. – ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!..
அதாவது ஏகே 62 படம் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்றும் இப்போது அது மகிழ் திருமேனிக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும் ஒரு ரசிகனாக அந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அஜித் சார் கிட்ட எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.