டேக் ஆப் ஆன விக்கி - பிரதீப் படம்.. கலர்புல்லா நடந்த பூஜை!.. புகைப்படங்கள் உள்ளே!..

by சிவா |
pradeep
X

போடா போடி திரைப்படம் முலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்புவும், வரலட்சுமி சரத்குமாரும் நடித்திருந்தார்கள். படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், மன்சூர் அலிகான் என பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதையை விக்னேஷ் சிவன் அமைத்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது. அதோடு, அனிருத்தின் இசையும் சிறப்பாக அமைய இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

pooja

இந்த படத்திற்கு பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் மற்றும் மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதோடு, அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்து அவருக்கு கை நழுவிப்போனது.

pooja

எனவே, இப்போது லவ் டுடே பிரதீப்புடன் கை கோர்த்திருக்கிறார். இப்படத்தை லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப்புக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இப்போது இவர் விக்னேஷ் சிவனுடன் கை கோர்த்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

pooja

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தெலுங்கு பட நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். இன்று இப்படத்தின் பூஜையும் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pooja

Next Story