என் முகம் கொண்ட!.. உன் குணம் கொண்ட!.. குழந்தைகளின் முகத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்…

Published on: September 27, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கிறார்கள். ஐயா படத்தில் துவங்கி 18 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இத்தனை வருடங்களாக மார்க்கெட்டை தக்க வைத்து நம்பர் ஒன் நடிகையாகவும் வலம் வருவது நயன்தாரா மட்டுமே. அவருக்கு முன்னும், பின்னும் வந்த பல நடிகைகளும் மார்கெட் குறைந்தோ, காணாமலோ போய்விட நயன்தாரா இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்துள்ள இறைவன் படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

nayan

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஊரறிந்த விஷயம். சில வருடங்கள் லிவிங் டூகெதரில் இருந்த இந்த ஜோடி ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகிறார்கள். மேலும், வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆனார்கள்.

இதையும் படிங்க: லியோ ஆடியோ லான்ச்தான் இல்ல!.. இதையாவது செய்யுங்க ப்ளீஸ்!.. கதறும் விஜய் ஃபேன்ஸ்…

vignesh

அந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் சிவன், உலக் திவாக் சிவன் என பெயர் வைத்தனர். அதேநேரம், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டாலும் இருவரின் முகத்தையும் சரியாக காட்டவில்லை.

vignesh

இந்நிலையில், நேற்று அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், என் முகம் கொண்ட என் உயிர்.. என் குணம் கொண்ட என் உலக்.. இப்படி ஒரு புகைப்படத்தை பகிர பல நாட்கள் காத்திருந்தேன்.. என் மகன்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள்.. அப்பா. அம்மா உங்களை நேசிக்கிறார்கள்.. அதை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.. இந்த உலகத்தை எல்லாவற்றையும் விட உங்களை நேசிக்கின்றோம்’ என உருகியுள்ளார்.

இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து!.. உண்மையான காரணம் இதுதானா?!…

vignesh

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.