கோவில் கோவிலாக செல்லும் நயன்-விக்கி ஜோடி...வெளியான புதிய புகைப்படம்...
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மேலும், அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டும், நயனை கொஞ்சி கொஞ்சி பதிவிட்டும் விக்னேஷ் சிவன் நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் அதோடு, இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நயன்தாரா ஒரு பேட்டியிலும் கூறியிருந்தார்.
ஒருபக்கம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.
சமீபகாலமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கோவில் கோவிலாக சுற்றி வருகிறன்றனர். சென்னையில் உள்ள கோவில்களுக்கு சென்ற அவர்கள் அடுத்து திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தற்போது சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் ‘சீரடியில் கண்மணியுடன் இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.