More
Categories: Cinema News latest news

தங்கமே!…வைரமே!…நயனின் செம க்யூட் கிளிக்ஸ்…விக்கி பகிர்ந்த புகைப்படங்கள்….

திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

Advertising
Advertising

திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலர் தினம், பிறந்த நாள் தினம், புத்தாண்டு என முக்கிய நாட்களில் ஜாலியாக வெளிநாட்டுக்கு பயணம் செய்து அது தொடர்பான புகைப்படங்களை விக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்கி வெளியிட்டு 90 கிட்ஸ்களை உசுப்பேற்றினார். அதிலும், இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் பலருக்கும் வயித்தெரிச்சலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு ஜாலி பயணம் செய்தனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்களை விக்கி பகிர்ந்து வருகிறார். ஒரு உணவகத்தில் கவர்ச்சி உடையில் நயன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களையும், ஸ்பெயினில் நடு ரோட்டில் கையோடு கை கோர்த்து ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்களையும் ஏற்கனவே பகிர்ந்தார்.

இந்நிலையில், நயனை வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து விக்கி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா