Connect with us
nayan

Cinema News

6 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல… நயனுடன் ஸ்வீட் மெமரியை பகிர்ந்த விக்கி….

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் காதலித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர இருவரும் ஒன்றாகவே வசித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் பெரும்பாலும் கொச்சினில் உள்ள நயன்தாராவின் வீட்டில்தான் இருக்கிறார். தனது பிறந்தநாள், நயன்தாராவின் பிறந்தநாள், ஓணம் என அனைத்து நாட்களிலும் நயனின் வீட்டில்தான் அவர் கொண்டாடுகிறார்.

மேலும், நயன்தாரா எங்கு சென்றாலும் பாடி காட் போல் விக்னேஷ் சிவனும் அவருடனே செல்கிறார். தற்போது விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

vicky

சமீபத்தில் கூட திருப்பதி, சாய் பாப கோவில் மற்றும் மும்பையில் உள்ள சில கோவில்களில் இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

vicky

இந்நிலையில், நானும் ரவுடிதான் வெளியாகி 6 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ‘6 வருடம் மாதிரியே உணரவில்லை’ எனக்கூறி நயனுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

nayan

google news
Continue Reading

More in Cinema News

To Top