நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டு 90 கிட்ஸ் மனதை அலைக்கழித்து வருகின்றனர்.
மேலும், நயனின் பிறந்தநாளுக்கு அவரை கொஞ்சி கொஞ்சி வார்த்தைகளை போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.

ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன் நடித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நயனுடன் எடுத்துக்கொண்ட ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார்.

