Categories: latest news

நான் யாருனு தெரியும்ல? என்கிட்ட வச்சுக்கிட்டா அவ்ளோதான்.. அடாவடி பண்ணும் விக்னேஷ் சிவன்

Vignesh Shivan: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக முதன்முதலில் அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். தமிழில் இவர் கடைசியாக இயக்கிய படம் என்றால் காத்து வாக்குல ரெண்டு காதல். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.சி என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: ‘கங்குவா’ படத்தை தொடந்து சூர்யாவின் அடுத்த படத்திற்கும் அதே நிலைமைதான் போல! எங்க போய் முடிய போதோ?

இந்த படத்தில் சில பல பிரச்சனைகள் இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு வருகிறது. அதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தான் என்றும் சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் தான் பணியாற்றி வந்தாராம். அதன் பிறகு அவரை மாற்றி அவருக்கு பதிலாக நீரோஷா பணியாற்றினாராம்.

இப்போது அவரும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அதற்கு காரணம் விக்னேஷ் சிவன் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ரவிவர்மன் மற்றும் நிரோஷா இவர்களை பொருத்தவரைக்கும் அனுபவத்தில் சீனியர்கள் .அதனால் விக்னேஷ் சிவனை விக்கி என்று அழைத்தார்களாம். அது விக்னேஷ் சிவனுக்கு ஒரு மாதிரியான நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில சிம்புகிட்ட வந்து நிக்குதே! சூடுபிடிக்கும் ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சினை

என்ன இருந்தாலும் இன்று சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள மனிதராக நல்ல அந்தஸ்தை உடைய செலிபிரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அனைவர் முன்னிலையிலும் தன்னை விக்கி என அழைப்பதை அவர் விரும்பவில்லையாம். அதன் காரணமாகவே அவர்களுக்குள் சில பல கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது வேறு ஒரு ஒளிப்பதிவாளரை அணுகி வருகிறாராம் விக்னேஷ் சிவன்.

Rohini

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago