
Cinema News
விருப்பமே இல்லாம தான் தனுஷோட அந்த படத்துல நடிச்சேன்…. உண்மையை உளறிய பிரபலம்….!
சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். அடுத்தடுத்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடி தான் என சூர்யா விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்தார் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றி காரணமாக தற்போது டாப் நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளது.
அதன்படி அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் விருப்பம் இல்லாமல் தனுஷ் படத்தில் நடித்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் வேலையில்லா பட்டதாரி.
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் விக்னேஷ் சிவனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய விக்னேஷ் சிவன், “அந்த படத்தில் நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. விருப்பம் இல்லாமல் தான் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தேன்.
அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நபர் அன்று வரவில்லை. அதனால் தான் தனுஷ் சார் என்னை நடிக்க வைத்தார்” என்று கூறியுள்ளார். என்னதான் உண்மையா இருந்தாலும் இப்படியா பொதுவெளியில் கூறுவது.