எல்லாத்தையும் உதறித்தள்ளிய விக்னேஷ்சிவன்! விரக்தியில் எடுத்த முடிவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தார் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சர்ச்சை காட்சிகள் இருந்தாலும் அந்தப் படம் பெரும்பாலானோருக்கு பிடித்த படமாகவே அமைந்தது. அதனை அடுத்து நானும் ரௌடிதான் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தார்.
அந்தப் படத்தின் வெற்றி விக்னேஷ் சிவன் மீது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்திற்கு பிறகு தான் நயன் மீது காதலும் பிறந்தது. அந்த வகையில் மிகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த செய்தி வெளியானதில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களும் மகிழ்ச்சிகளையும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கூறிவந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் அஜித்தின் துணிவு பட வெற்றி.
அதனால் அஜித்தின் அடுத்த படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என நினைத்திருந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்று வெளியானதும் இன்னும் குஷியானார்கள். ஆனால் சில பல பிரச்சினைகளால் விக்னேஷ் சிவன் படத்தை இயக்க முடியாமல் போனது. அந்த நேரம் விக்னேஷ் சிவன் கடும் அப்செட்டில் இருந்தார்.
ஆனால் அதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்தார். இருந்தாலும் விக்னேஷ் சிவன் மீது ஒருவித நெகடிவ் எண்ணங்கள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் வந்தன என விக்னேஷ் சிவன் நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
அதாவது ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் எப்படி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதோ அதே மாதிரியான ஒரு நிகழ்ச்சியைத்தான் விக்னேஷ் சிவனும் தொகுத்து வழங்கப் போகிறாராம். இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது இன்னும் பேரதிர்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.