“அஜித்துக்கு சீன் சொன்னா பணம் கிடைக்குமா??”… விக்னேஷ் சிவன் செய்த தாறுமாறான சம்பவம்… வேற வெவல் பண்ணிட்டாரே!!
அஜித்குமார் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது.
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தனது வீடியோ ஒன்றில் விக்னேஷ் சிவன் குறித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது விக்னேஷ் சிவன் தனக்கு கீழ் பணிபுரியும் உதவி இயக்குனர்களை அழைத்து ஒரு அறைக்குள் உட்காரவைத்தாராம். அங்கே விக்னேஷ் சிவன் ஒரு சில காசோலைகளை டேபிளில் எடுத்து வைத்திருக்கிறார். அப்போது அங்கிருந்த உதவியாளர்களை பார்த்து “நாம் படமாக்க இருக்கும் அஜித் திரைப்படத்திற்கு யார் யாரெல்லாம் நல்ல நல்ல சீன்கள் சொல்கிறீர்களோ அவர்களுக்கு உடனே செக் எழுதி தரப்படும்” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் உருகி உருகி காதலித்த டாப் ஹீரோயின்… ஆனா கடைசில என்ன ஆச்சு தெரியுமா??
இதனை கேட்டவுடனே உதவியாளர்கள், தங்களுக்கு தோன்றிய பல நல்ல நல்ல சீன்களை கூறியிருக்கிறார்கள். அதன் பின் அந்த உதவியாளர்களுக்கு அதிகளவிலான ரூபாய்களை காசோலையில் எழுதி தந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். உதவி இயக்குனர்கள் கூறிய காட்சிகளை விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் பயன்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது.