Connect with us

Cinema News

அனிருத்துக்கே ஆப்படிச்சிடுவாரு போல!.. விக்னேஷ் சிவனுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கா.. எல்லாம் நயன் செயல்!..

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை ஒவ்வொரு நிமிடமும் ஹேப்பியான தருணங்களாக மாற்ற லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ளார். அப்படி அவர் விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸாக கொடுத்த இசை நிகழ்ச்சியில், திடீரென உள்ளே புகுந்து விஜய் சிவன் தனது ஒட்டுமொத்த திறமையை காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் திறமையான பாடலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல், வலிமை, ஜெயிலர் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அய்யா அட்லீ அந்த படத்தை சீக்கிரம் பண்ணுய்யா!.. விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. என்ன சொன்னார் தெரியுமா?..

அனிருத் இசையில் உருவான பாடல்களுக்கும் விக்னேஷ் சிவனின் வரிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வந்த நிலையில், அனிருத்துக்கு டஃப் கொடுப்பது போல தற்போது தனது இசை திறமையையும் மொட்டை மாடி மியூசிக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு விக்னேஷ் சிவன் தாளம் போட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை நயன்தாரா ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து அசத்தி இருந்தார். அதன் ஒரு பகுதியாக மொட்டை மாடி மியூசிக் குழுவினர் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த இசை நிகழ்ச்சியில் தான் விக்னேஷ் சிவன் வெண்மதி வெண்மதியே பாடலுக்கு மியூசிக் வாசித்து கலக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கமல் படங்களில் நடித்த ஹீரோயின் பெயர்களை இதுவரை கவனிச்சிருக்கீங்களா? யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம்

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கியின் பிறந்தநாளிலேயே அந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

கூடிய விரைவிலேயே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் உருவாகும் என தெரிகிறது. மேலும், நயன்தாரா தான் ஹீரோயின் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CxXx8aLRtlP/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

google news
Continue Reading

More in Cinema News

To Top