காதலர் தினத்துல விக்னேஷ் சிவன் போஸ்ட் இல்லாமையா? ஏலேய் பத்து வருசம் ஆச்சா? ஷாக்கான ரசிகர்கள்

Nayan Vignesh Shivan: கிட்டத்தட்ட சில வருடங்களாகவே காதலர் தினத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயனின் காதல் ரசம் கொட்ட ஒரு போஸ்ட் கண்டிப்பாக வந்துவிடும். அதை பார்த்து முதலில் வயிறு எறிந்த ரசிகர்களுக்கு பின்னர் அதுவே பழகிவிட்டது. கல்யாணம் முடிந்தும் அந்த வழக்கத்தினை விக்கி மாத்தாமலே இருக்கிறார்.
நானும் ரவுடி தான் படத்தினை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அவருக்கு வாழ்க்கை கொடுத்ததை போல நயனின் இரண்டாம் இன்னிங்ஸுக்கும் உதவியது அப்படம் தான். சினிமாவில் மட்டும் அல்ல கிட்டத்தட்ட நயனின் வாழ்க்கையிலும் அது அடுத்த இன்னிங்காக இருந்தது.
இதையும் படிங்க: விஜய் கூட நடிக்க வாய்ப்பு வந்தும் நோ சொல்லிட்டேன்! என்னப் போய் அப்படி நடிக்க சொன்னா? புலம்பும் நடிகை
பல காதல் தோல்விகளுக்கு பின்னர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். காதலிக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதை ஓபனாக நயன் எங்குமே சொல்லவில்லை. ஆனால் அவர்கள் காதலுக்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்தது. ஏனெனில் அதுவரை சமூக வலைத்தளங்களில் இல்லாத நயனின் பிரத்யேக புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிடுவார்.
பிறந்தநாள் படங்களை விட இருவரின் காதலர் தின புகைப்படங்கள் வெகுவாக ரீச் கொடுக்கும். அன்னையர் தினத்துக்கு அவர் போஸ்ட்டெல்லாம் செம அப்ளாஸ் தட்ட இந்த காதலும் அவ்வளவு தான் என சிலர் கேலி செய்தனர். ஆனாலும் இருவரும் அதில் உறுதியாக இருந்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: வெற்றி துரைசாமி இதற்காத்தான் லடாக் பகுதிக்கு போனாரா?!. வெளியான புதிய தகவல்!..
வாடகை தாய் மூலம் அடுத்த சில மாதங்களிலே இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன்தாரா. இன்னும் சில சர்ச்சைகளுக்குள் சிக்கி கொண்டு இருக்கும் அவருக்கு எப்போதும் போல இந்த வருடமும் காதலர் தின வாழ்த்தினை விக்னேஷ் சிவன் தன்னுடைய ஸ்டைலில் தெரிவித்து இருக்கிறார்.
அதில், நயனுடன் 10 வருடங்கள். காதலர் தின வாழ்த்துக்கள். டிக்கேட் வித் மை தங்கம். நீ என் உயிர் என்பதிலிருந்து நான் உன் உலகம் ஆனேன். இப்போது உயிர் மற்று உலகம் நீ & நான் ஆகியிருக்கிறோம்! அடுத்த பிறவியிலும், முதுமையில் இணைந்து பல தருணங்களை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.