Connect with us

தாலி கட்ட நேரம் வந்துடிச்சி.! தேதி குறி வச்சிட்டாங்களாம்.! விரைவில் நயனுக்கு டும் டும் டும்.!

Cinema News

தாலி கட்ட நேரம் வந்துடிச்சி.! தேதி குறி வச்சிட்டாங்களாம்.! விரைவில் நயனுக்கு டும் டும் டும்.!

தற்போதெல்லாம் திரை நட்சத்திரங்கள் ஜோடியாக உலா வருவது மிகவும் சகஜமாகிவிட்டது. ஓரிரு மாதங்கள் அல்லது வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர், அதன் பிறகு சிலர் சரிவராது என பிரிந்து விடுகின்றனர். அதிலும், சிலர் திருமணம் செய்துகொண்டு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் தங்களது மண வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

அப்படி இருப்பவர்கள் மத்தியில், நீண்ட வருடங்களாக தங்களை காதலர்களாக அறிவித்து கொண்டு, காதல் பறவைகளாக தமிழ் திரையுலகில் உலா வருகின்றனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா.

இவர்கள் “நானும் ரவுடி தான்” எனும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடிக்கும் போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் பிறகு, இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன் – விராட் கோலியின் முதல் கேர்ள் பிராண்ட் நானா.?! அதிர்ந்து போன சாக்ஷி.! பின்னணி இதுதான்.!

 

ஆம் , வருகிற ஜூன் மாதம் இவர்களின் திருமணம் இருக்கும் என கூறப்படுகிறது. இவர்களின் நிச்சயதார்த்தம் போல்  எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அவர்கள் குடும்பம் மட்டும் கலந்துகொண்டுநடந்து முடிந்தது. அதேபோல, திருமணத்தையும் முடிக்க இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதனால் தான் அது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

ஜூன் மாதத்தில் திடீரென நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம், பெற்றோர்கள் சுற்றம் சூழ நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என புகைப்படங்கள் வெளியானால் கூட ஆச்சரியமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top