ஷங்கர் போல சீன் போடும் விக்னேஷ் சிவன்.. டிராகனை காலி பண்ணாம விடமாட்டார் போல!...

vikki
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியது. அந்தப் படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து பல படங்களை இயக்குவார் என இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இருந்தாலும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்து ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்னேஷ் சிவனை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்தனர்.
ஆனால் யார் கண் பட்டதோ அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் படங்களே இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன், குழந்தை மனைவி என தன் குடும்ப பொறுப்பைக் கவனித்துக் கொண்டு வந்தார். அப்பொழுதுதான் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த படம் புரொடக்ஷனில் இருந்து வருகிறது .அந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படமும் வெளியாகி மாபெரும் ஹிட் ஆகிவிட்டது. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் கீர்த்தீஸ்வரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட் ஆகி அந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் எல்ஐகே படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடு இல்லை.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் எல்ஐகே படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்க வேண்டி இருப்பதாக சொல்லி இருக்கிறாராம். அதற்கு ஐந்து கோடி செலவாகும் என்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறாராம் .இந்த படத்தை தயாரிப்பது லலித். அதனால் ஐந்து கோடி என்பது ஒரு பெரும் தொகையாக பார்க்கப்படுகிறது. அதனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
இன்னொரு பக்கம் பிரதிப் ரங்கநாதன் அடுத்தடுத்து படங்களில் நடித்து ஒரு வளர்ந்து வரும் நடிகராக மாறி இருக்கிறார். தற்போது கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் படத்தில் நடிக்க துவங்கியுள்ள பிரதிப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமீதா பைஜூ ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைப்பாளராக பணிபுரிகிறார். அவருடைய நடிப்பில் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரு படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூலித்து வணிக ரீதியாகவும் பெரிய இடத்திற்கு சென்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன். அதனால் விக்னேஷ் சிவன் இயக்கும் அந்தப் படமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.