லண்டனில் குமுற குமுற குத்து வாங்கிய விக்னேஷ்சிவன்!.. காண்டாகிய லைக்கா நிறுவனம்.. ஏகே-62 கைமாறியது எப்படி?..
இப்போது மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கும் செய்தி அஜித்தின் ஏகே-62 படத்தை இயக்கப் போவது யார் என்பது தான். ஏற்கெனவே விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் நேற்று முதல் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் காட்டுத் தீ போல பரவியது.
அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அதாவது லண்டன் சென்று லைக்கா நிறுவனத்திடம் கதை சொல்ல போயிருக்கிறாராம் விக்னேஷ் சிவன். கதையை கேட்ட லைக்கா நிறுவனம் குப்பை கதை என்று சொல்லி வச்சு வாங்கியிருக்கிறது.
அதற்கு முன்னால் அஜித்திடம் சொல்லி அஜித்திற்கே கதை பிடிக்கவில்லையாம். அவர் பிடிக்கவில்லை என்று சொல்லியும் அதையும் மீறி தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்திடம் சொல்லி ஓகே பண்ணிவிடலாம் என்று தான் போனாராம் விக்னேஷ் சிவன்.
இதுவே அஜித்திற்கு கொஞ்சம் வருத்தமாம். மேலும் கதை ரெடி பண்றேன் என்று சொல்லி கிட்டத்தட்ட 8 மாதங்கள் வெட்டியாக கழித்துக் கொண்டிருந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். கடைசியில் பிப்ரவரியில் படப்பிடிப்பு என்று இருக்கும் நிலையில் இப்படி ஒரு குப்பை கதையை கொண்டு வந்து கொடுத்தது அஜித் மத்தியிலும் லைக்கா நிறுவனம் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அஜித்தும் ஒரு சொந்த விஷயமாக லண்டன் போக நேற்று ஒரு பெரிய மீட்டிங்கே போட்டார்களாம். இதனிடையில் அஜித்திடம் கால்ஷீட் கேட்காமல் சந்தானத்திடம் ஒரு இரண்டு மாதம், மொட்டை ராஜேந்திரனிடம் இரண்டு மாதம் என்று அவர்கள் கால்ஷீட் எல்லாவற்றையும் ப்ளாக் பண்ணி வைச்சிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
ஆக மொத்தத்தில் விக்னேஷ் சிவன் இந்த 8 மாதங்களில் சும்மாவே பொழுதை போக்கிக் கொண்டிருந்திருக்கிறார் என்று ஏகே - 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தான் இப்போது வைரலாகி வருகின்றது. அதே சமயத்தில் ஏகே - 62 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கப்போவதாக தகவல் வெளியானது.
அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் விஷ்ணுவர்தன் ஹிந்தியில் சல்மான் கானுடன் பிஸியாக இருக்கிறாராம். அவரின் மகனை வைத்து ஏதோ ஒரு படம் பண்ணப் போகிறாராம். அதனால் ஏகே - 62 படத்தை இயக்கப்போவது யாரு என்ற கேள்வி புரியாத புதிராகவே இருக்கிறது.