விக்னேஷ் சிவன் இப்படி பண்ணியிருக்க கூடாது...! முதல் பெண் போலீஸ் ’திலகவதி ஐபிஎஸ்’ கூறும் பகீர் குற்றச்சாட்டு...

by Rohini |   ( Updated:2022-06-27 07:56:18  )
vikki_main_cine
X

தமிழ் சினிமாவையே சமீபத்தில் பிரமிப்பில் ஆழ்த்திய சம்பவம் என்னவென்றால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்களின் திருமணம் தான். பிரபலங்களே அன்னாந்து பார்க்கிற அளவுக்கு அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பயன்படுத்தி திருமணத்தை நடத்தினர்.

vikki1_cine

இவற்றையெல்லாம் பார்த்த சிலருக்கு ஏன்டா திருமணத்திற்கு வந்தோம் என்ற அளவுக்கு கூட சில சம்பவங்கள் நடந்தன. QR கோடு ஸ்கேன் செய்து தான் வந்தவர்களை உள்ளே அனுமதித்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவர்களது திருமணத்தை 30 புரோகிதரர்கள் முன்னின்று நடத்தினார்கள்.

vikki2_cine

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்று சுவாமியை தரிசனம் செய்து ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவனை பற்றிய சில கசப்பான செய்திகளை தமிழ் நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐபிஎஸ் கூறியுள்ளார். விக்னேஷ் சிவனின் அம்மாவும் ஒரு போலீஸ் என்பதால் பெண் போலிஸ்களுக்குள் விக்னேஷ் சிவன் ஒரு செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார்.

vikki3_main_cine

திலகவதி ஐபிஎஸ் கூறும்போது விக்கி எங்களுக்கு எல்லாம் ஒரு வளர்ப்பு பிள்ளைதான். சினிமாவில் இருக்கும் அத்தனை துறைகளையும் சிறுவயதில் இருந்தே நன்கு நோட்டம் விட்டு ஒரு எழுத்தாளராக பாடலாசிரியராக இயக்குனராக தயாரிப்பாளராக நன் முறையில் வளர்ந்து நிற்கும் விக்கி எல்லாருக்கும் முன்னுதாரணமாக அவர் திருமணத்தை மிக எளிமையாக நடத்திக் காட்டியிருக்கலாம். இது எனக்கு வருத்தத்தை தான் அளிக்கிறது என கூறினார்.

Next Story