அந்த நடிகரே நிராகரித்த கதை!.. அஜித்துக்கே விபூதி அடிக்க பார்த்த விக்னேஷ் சிவன்!...
நடிகர் அஜித்தின் ஏகே 62 கதையை ஒரு வழியாக மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியான நிலையில் அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. இதற்கு முன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது.
ஆனால் பிப்ரவரியில் படப்பிடிப்பை வைத்து படத்திற்கான முழு ஸ்கிர்ப்டையும் முடிக்காமல் வைத்திருந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அஜித்திடமும் லைக்காவிடமும் ஒரு கதையையும் சொல்ல அந்தக் கதை அஜித்திற்கும் பிடிக்கவில்லை. லைக்காவிற்கும் பிடிக்காமல் போனது. மேலும் கடந்த 8 மாதங்களாக எண்ண செய்து கொண்டிருந்தீர்கள் என்று தாறு மாறான கேள்விகளை கேட்டு விக்னேஷ் சிவனை குடைந்து தள்ளியது லைக்கா நிறுவனம்.
அதனாலேயே இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற வேண்டிய சூழ்நிலையும் நிலவியது. அஜித்தை
வைத்து படம் பண்ணப் போறேன் என்ற குஷியில் சமூக வலைதளங்களில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அது நடக்காமல் போகவே பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதல்கள் கூறினர்.
அதில் குறிப்பாக சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு போன்றோரும் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல்களை கூறியிருக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலாக விஜய்சேதுபதி தானாக வந்து நான் கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே இருவருடைய கூட்டணியில் இரணடு படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கிறது.
இப்போது இணைந்தால் அவர்கள் இணையும் மூன்றாவது படமாக இருக்கும். விஜய்சேதுபதிக்காக எந்த மாதிரியான கதையை தயார் செய்து வைத்திருந்தார் என்று விசாரித்தால் எந்தக் கதை பிடிக்க வில்லை என்று அஜித் சொன்னாரோ அதே கதை தானாம். ஆனால் அந்தக் கதை அஜித்திற்கு முன்னாடியே விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனிடம் சொல்லியிருக்கிறார்.
ஏதோ ஒரு காரணத்தினால் சிவகார்த்திகேயனும் முடியாது என அதன் பிறகே அஜித்திடம் வந்திருக்கிறது. இப்போது அஜித்தும் வெளியே துரத்த கடைசியாக விஜய்சேதுபதியிடம் வந்திருக்கிறது. ஏற்கெனவே விஜய்சேதுபதியின் மார்கெட் குறைந்த நிலையில் எப்படி இருந்தாலும் ஒகே என்ற மன நிலையில் இறங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி.
இதையும் படிங்க : சிவாஜி நடித்த படம்.. டைட்டில் கார்டில் பேர் போடுவதில் குழப்பம்.. ஏன்னா உடன் நடித்த நடிகர் அப்படி..