விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்... இதுதான் காரணமாம்...!
கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அனைத்து திரைபிரபலங்களுக்கும் பிடித்தமான நடிகராக விஜய் இருப்பதால் அனைத்து நடிகர்களும் இவரின் படங்களில் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இன்னும் சில நடிகர் மற்றும் நடிகைகள் விஜய் படத்தில் நடிக்க நேரடியாகவே வாய்ப்பு கேட்டு வருகியார்கள். இப்படி பலரும் அவரின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆரம்ப காலத்திலேயே விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை நடிகர் தனுஷ் மறுத்துள்ளார்.
அதன்படி கடந்த 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்ற பகவதி படத்தில் விஜய்யின் தம்பி கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருப்பார். ஆனால் ஜெய்க்கு முன்னதாக அப்போது அறிமுக நடிகராக இருந்த நடிகர் தனுஷுக்கு தான் இநத வாய்ப்பு கிடைத்துள்ளது.
அது ஆரம்பகாலம் என்றாலும் நான் தம்பியாக நடிக்க முடியாது நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற முடிவில் உறுதியாக இருந்ததால் தனுஷ் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். இதனால் அந்த சமயத்தில் தனுஷ் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். மேலும் விஜய் ரசிகர்கள் தனுஷை பயங்கரமாக கிண்டல் செய்தனர்.
அப்போது தவறவிட்ட வாய்ப்பு தான் தற்போது வரை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை. ஒருவேளை அப்போது தனுஷ் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தால் வெகு விரைவிலேயே சினிமாவில் உச்சத்திற்கு வந்திருப்பார். தற்போது தாமாதமாக வந்தாலும் தனுஷின் வளர்ச்சி அசுர வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.