வாங்க.. லேடிஸ் போட்டோகிராபர்.! பத்திரிகையாளரை விஜயகாந்த் இப்படிலாம் சீண்டுவரா.?! சினி சீக்ரெட்ஸ்...

by Manikandan |
வாங்க.. லேடிஸ் போட்டோகிராபர்.! பத்திரிகையாளரை விஜயகாந்த் இப்படிலாம் சீண்டுவரா.?! சினி சீக்ரெட்ஸ்...
X

தற்போது பெரிய நடிகர், சிறிய நடிகர் என யாராக இருந்தாலும் தனது காட்சி ஷூட்டிங் முடிந்த பிறகு, உடனே கேரவன் அல்லது தனி அறைக்குள் புகுந்து விடுகின்றனர். தான் வெளியில் நின்று கொண்டிருந்தால், யாரேனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருவார்கள். அல்லது தன்னை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றி விடுவார்கள் என்று பயந்து தற்போது இவ்வாறு நடிகர், நடிகைகள் செய்து வருகின்றனர்.

ஆனால், அந்த காலத்தில் அப்படி எல்லாம் கிடையாது. பத்திரிகையாளர்களுடன் பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் மிகவும் இனக்கமான சூழலில் இருந்து வந்தனராம்.

அதிலும், பெரிய நடிகர்கள் பத்திரிக்கையாளர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க நினைப்பார்களாம். அவர்களுடன் மிகவும் சகஜமாக பேசுவார்களாம். இதனை அண்மையில் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜயகாந்த் எப்போதும் பத்திரிக்கையாளர் உடன் மிகவும் இணக்கமாக இருப்பார். எங்களுடன் ஒரு புகைப்படக் கலைஞர் ஒருவர் வருவார். அவர் ஒரு முன்னணி பத்திரிக்கையில் வேலை பார்த்து வந்தார். அவர் பெயர் கோபால். அவர் எப்போதும் அட்டைப்படத்திற்காக கதாநாயகிகளை மட்டுமே போட்டோ எடுத்து வருவார்.

இதையும் படியுங்களேன் - ஓசி ரோல்ஸ் ராயல்ஸ் காரில் வலம் வந்த அட்லீ.! தளபதி விஜய் கிட்ட கேட்டா உடனே கொடுத்திருப்பாரே.?!

இதனை கவனித்த விஜயகாந்த், ஒருமுறை அவரை அழைக்கும்போது, ' வாங்க லேடிஸ் போட்டோகிராபர்.' என்று கிண்டலாய் அவரை சீண்டியுள்ளார். மேலும், ஒருமுறை விஜயகாந்தை அந்த போபால் என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

உடனே, இதனை பார்த்த விஜயகாந்த், இவர் லேடிஸ் போட்டோகிராபர் ஆயிற்றே, இவர் எப்படி என்னை போட்டோ எடுப்பார் என்று மீண்டும் கிண்டலாக அவரை சீண்டியுள்ளார் கேப்டன் விஜயகாந்த். அந்தளவுக்கு பத்திரிகையாளர்களுடன் நடிகர்கள் மிகவும் நெருக்கமாகவே இருந்துள்ளனர். தற்போது தான் மீடியாக்காரர்கள் உடன் நடிகர், நடிகைகள் சற்று இடைவெளிவிட்டு இருக்கின்றனர் என்கிறார் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி.

Next Story