Categories: latest cinema news

Vijay: 35 லட்சம் சார்.. அப்படியே மண்ணுக்குள்ளே போயிடுச்சு.. விஜயால் புலம்பும் தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்களின் நிலைமை:

ஓவ்வொரு தயாரிப்பாளர்கள் வாழ்க்கையிலும் ஒரு சோகமான பின்னணி சம்பவம் இருக்கத்தான் செய்கின்றன. தயாரிப்பாளர் என்றால் படம் எடுக்கிறவர், அவரிடம் நிறைய பணம் இருக்கும் என்றுதான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் ஒரு படத்தை எடுப்பதற்குள் அவர்கள் படும் பாடு இருக்கிறதே. அதிலும் சில தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் ஆசையில் வெளியில் அதுவும் சில ஃபைனான்சியரிடமிருந்து பணம் வாங்கித்தான் படம் எடுக்கிறார்கள்.

இதில் கால்ஷீட் கொடுத்தும் சில நடிகர்கள் பிஸியாக இருந்தால் வட்டிக்கு மேல் வட்டி ஆகி கடைசியில் கடனாளியாக மாறிய எத்தனயோ தயாரிப்பாளர்களை இந்த திரையுலகம் சந்தித்துதான் வருகின்றது. அதில் ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பாளர் காஜா மொகைதீன் அவருடைய கஷ்டத்தை சமீபகாலமாக ஒரு பேட்டியில் கூறி வருகிறார். நல்லா போய்க் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் பெரிய பூகம்பம் ஏற்பட்டதே அஜித் படத்தால்தான்.

ஆனந்த பூங்காற்றே ஹிட்:

அஜித்தை வைத்து ஆனந்த பூங்காற்றே படத்தை எடுத்து பெரிய வெற்றி கண்டாலும் அதை தொடர்ந்து ஜனா படத்தை எடுத்தார் காஜா மொகைதீன். அந்தப் படத்தின் கதை சொதப்பலால் படம் அட்டர் ஃபிளாப் ஆனது. அந்தப் படத்திற்காக வெளியில் பணம் வாங்க பெரிய கடனாளியாக மாறினார் காஜா மொகைதீன். அன்றைக்கு தயாரிப்பு பணியை விட்டவர் இப்போது வரை எந்தப் படங்களையும் அவர் தயாரிக்கவே இல்லை.

இப்போது ரியல் எஸ்டேட் போன்ற பிஸினஸ்களை செய்து கொண்டு ஏதோ தன்னுடைய வாழ்க்கை பரவாயில்லாமல் போய் கொண்டிருப்பதாக கூறினார் காஜா மொகைதீன். மேலும் மறுபடியும் அந்த நடிகர் என்னாலதான் கஷ்டபட்டீர்கள், அதனால் கால்ஷீட் தருகிறேன் படம் எடுங்கள் என்று சொன்னாலும் செத்தாலும் படம் எடுக்குறதா ஐடியாவே இல்லை என்றும் அஜித்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் காஜா மொகைதீன்.

ஷாரூக்கான் படத்தின் ரீமேக்;

இந்த நிலையில் விஜயை வைத்தும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தாராம் காஜா மொகைதீன். விஜய் நடித்த புதிய கீதை படத்தை முதலில் காஜா மொகைதீன் தான் எடுக்க இருந்ததாம். அதன் பிறகு அந்த கதையை கொடுங்கள், நாம வேணும்னா வேறொரு கதையை பண்ணுவோம் என புதிய கீதை படத்தின் கதையை வாங்கி வேறொரு இயக்குனருக்கு கொடுத்து அந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.

இந்தப் பக்கம் எஸ்.ஏ. சி காஜா மொகைதீனிடம் ஷாரூக்கான் நடித்த ஒரு ஹிந்தி படத்தின் ரைட்ஸை வாங்க சொல்லி அதன் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்று கூறினாராம். எஸ்.ஏ .சி சொன்னதை போல அந்த ஹிந்தி படத்தை 35 லட்சத்திற்கு வாங்கியிருக்கிறார் காஜா மொகைதீன். ஹீரோயினாக ஐஸ்வர்யாராய் மற்றும் கரிஷ்மா கபூரை நடிக்க கேட்டிருக்கிறார்கள். அதில் ஒரு நடிகை ஓகே சொல்லிவிட்டாராம். இன்னொரு நடிகை சம்மதிக்கவில்லையாம். அதனால் அந்தப் படம் அப்படியே போய்விட்டது. என்னுடைய 35 லட்சமும் மண்ணோடு போய்விட்டது என காஜா மொகைதீன் ஒரு பேட்டியில் புலம்பினார்.

Published by
Rohini