Connect with us

படுதோல்வியடைந்த விஜயின் 50-வது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?…

Cinema History

படுதோல்வியடைந்த விஜயின் 50-வது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?…

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தான் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் இருந்து வருகிறார்.உலகம் முழுவதும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிவிட்டதால் சுமாரான கதை கொண்ட படமாக இருந்தாலும் அது பாக்ஸ் ஆபிஸில் பயங்கர ஹிட் அடித்து விடுகிறது.

தளபதி விஜயின் நடிப்பில் 50வது திரைப்படமாக மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது சுறா.ஆனால் 2010 இல் இவரது நடிப்பில் வெளியான சுறா திரைப்படம் உச்ச கட்ட கேலி கிண்டலுக்கு உள்ளாகி எதிர்பாராத அளவிற்கு தோல்வியை சந்தித்தது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இந்தப் படம் ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

பெரிதும் விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியடைந்தது.இந்நிலையில், சுறா படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டுமே விஜயின் சுறா திரைப்படம் சுமார் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

விஜய்யின் திரைப்பயணத்தில் மிக மிக குறைந்த வசூல் பெற்ற திரைப்படமாக சுறா தான் இருந்து வருவதாகவும் என கூறப்படுகிறது. வசூல் குறைவாகவே இருந்ததால் இப்படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திருக்கும் என்றும் ராஜ்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top