பயமெல்லாம் இப்போ முழுசா போய்டுச்சா விஜய்.?! அந்த நடிகை ஓகே தானா.?!

by Manikandan |
பயமெல்லாம் இப்போ முழுசா போய்டுச்சா விஜய்.?! அந்த நடிகை ஓகே தானா.?!
X

ஒவ்வொரு நடிகருக்கும் தனது 25ஆவது 50வது திரைப்படம் மிகவும் முக்கியமானதாக அமைய வேண்டும் என நினைத்திருப்பர். அந்த படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்று அந்த நடிகரும் நினைப்பார். ஆனால் தளபதி விஜய்க்கு அது எதிராகவே அமைந்தது.

அவரது 50வது திரைப்படம் சுறா. பலத்த எதிர்பார்ப்புகளிடையே வெளியான அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு விஜய் மற்றும் தமன்னா இருவரும் ஜோடி சேரவில்லை.

விஜய்யின் அடுத்தடுத்த படங்களுக்கு தமன்னாவின் பெயர் வரும் போதெல்லாம் விஜய் வேண்டாமென மறுத்து விடுவாராம். இது பல திரைப்படங்களில் தொடர்கதையாகி இருந்தது என செய்திகள் வந்துள்ளன.

இதனால் மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கான தீர்வு தற்போது வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம், தளபதி விஜயின் 66 ஆவது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பல கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வரையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையும் படியுங்களேன் - நடிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாருங்கடா.! அஜால் குஜால் வேலை செஞ்சா இப்படிதான்...

தற்போது விஜயுடன் இணைந்து நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தமன்னா ஏற்கனவே வம்சி இயக்கிய தோழா திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் சுறா படத்தில் ஏற்பட்ட பயம் தற்போது விஜய்க்கு நீங்கி விட்டது போல, அதனால் தான் மீண்டும் தமன்னாவிடம் பேசுவார்த்தை நடத்துகிறது படக்குழு என்று சிலாகித்து வருகின்றனர்.

Next Story