விஜய் 69 படத்துக்கு ஆப்பு வைத்த கமல்?!.. ஹெச். வினோத் என்ன பண்ணப் போறாரோ!...

by சிவா |   ( Updated:2024-08-14 07:49:53  )
vijay
X

Thalapathy 69: சினிமாவில் கதை திருட்டு என்பது பல வருடங்களாக நடந்து வரும் விஷயம். ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு கதையை யோசிப்பார். பல வருடங்கள் அதற்காக உழைத்து அதை மெருகேற்றி கதையை திரைக்கதையாக மாற்றுவார். ஆனால், அந்த கதை ஒருவரிடம் சொல்லப்படும்போது அது வாய் வழியாக பரவி விடும்.

அப்படி ஒரு இயக்குனரிடம் அந்த கதை போகும் போது அது அவரின் ஸ்டைலில் ஒரு படமாக உருவாகி விடும். ஏ.ஆர்.முருகதாஸ் பலமுறை இது போன்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் இயக்கத்தில் வெளியான கத்தி, சர்கார், ரமணா ஆகிய படங்களின் கதை வேறு சிலருடையது என புகார்கள் வந்தது.

இதையும் படிங்க: விஜய் கூடயா படம் பண்ணுற.. வெங்கட்பிரபுவிடம் அஜித் சொன்ன அந்த விஷயம்…

சில சமயம் ஒரே கதையை இரண்டு இயக்குனர்கள் படமாக எடுப்பார்கள். சிறு வித்தியாசம் மட்டுமே இருக்கும். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் கதையும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா நடித்து வரும் புதிய படத்தின் கதையும் ஒன்றுதான் என்று கூட சமீபத்தில் செய்திகள் கசிந்தது.

அது உண்மையா என்பது படம் வெளியானால்தான் தெரிய வரும். இந்நிலையில்தான் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தின் கதையும், விஜய்க்காக ஹெச்.வினோத் எழுதி வைத்திருக்கும் கதையும் ஒன்றுதான் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது.

Thug life

Thug life

இது விஜயின் 69வது திரைப்படமாகும். விஜயிடம் செல்வதற்கு முன் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க ஹெச்.வினோத் திட்டமிட்டிருந்தார். இதற்காக கமலுடன் கதை விவாத்திலும் ஈடுபட்டிருந்தார். கதையில் சில மாற்றங்களை கமல் சொன்னார். ஆனால், என்ன காரணமோ அந்த புராஜெக்ட் டேக் ஆப் ஆகவில்லை.

அதன்பின்னர்தான் மணிரத்னத்துடன் கை கோர்த்து தக் லைப் படத்தில் நடிக்க துவங்கினார் கமல். விரைவில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். இந்த நிலையில்தான், இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது.

இதையும் படிங்க: விஜயிற்கு என்னெல்லாம் நினைச்சீங்களோ… கோட்டில் அது இருக்கு.. வெங்கட் பிரபு கொடுத்த சூப்பர் அப்டேட்…

Next Story