விஜய் 69 படத்துக்கு இப்படி ஒரு சதியா? தளபதியோட நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன?
விஜய் கட்சிக்கொடி, கொள்கைப்பாடல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்போது விஜய் 69 படத்தைப் பற்றிய புதுத்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் உள்ள பிரச்சனை முடியாது போல உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் பிரச்சனை வருகையில் சுமூகமாகத் தீர்ந்துள்ளது. ஆனால் இந்த முறை தயாரிப்பாளர் சங்கம் ரொம்ப உறுதியாக இருக்காங்க. சம்பளத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் அது. அதே போல நடிகர்கள் ஜிம்பாய்ஸ் என அரை டஜன் பேரைக் கூட்டிட்டு வர்றாங்க.
அது மட்டுமல்ல. உதவியாளர் என்ற பேரில் இன்னும் அரை டஜன் பேர் வர்றாங்க. இவர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளத்தை கொடுத்து அழ வேண்டியிருக்கு. இதைத் தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல் தனுஷ், விஷால் போன்ற நடிகர்கள் மேல் தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்கார்டு போட்டுருக்காங்க. இது சம்பந்தமாக சமீபத்தில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்துனாங்க.
அதுல தயாரிப்பாளர் சங்கம் இட்ட 11 நிபந்தனைகளையும் நடிகர் சங்கம் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டதாம். அதன்பிறகு நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடத்துவது இல்லை என்பதை வாபஸ் வாங்கிக்கொண்டார்களாம். அது மட்டுமல்லாமல் நடிகர் சங்க நிர்வாகிகள் நிபந்தனையை ஏற்றதற்கு கடிதம் வாயிலாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள். இதற்கு வாய்ப்பு இல்லை.
அவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஏன்னா செயற்குழு, பொதுக்குழு கூட்டித் தீர்மானம் போட்டால் தான் இது நடக்கும். இந்த விஷயங்கள் எல்லாம் நடக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். அதனால் தயாரிப்பாளர் சங்கம் சொன்னது நடக்க வாய்ப்பு இருக்கு. அதாவது நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடத்துவதில்லை என்று சொன்னார்கள். அது நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் இதை மேலோட்டமாகப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் சம்பளத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தான் இப்படி தனுஷ், விஷாலுக்கு ரெட் கார்டு போட்டாங்களோன்னு எண்ணத் தோன்றும். ஆனால் இதனுள் ஒரு அரசியல் உள்ளது.
அதாவது இவர்கள் ஏன் நவம்பரைக் குறி வைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் விஜய் நடிக்கும் 69வது படம் அக்டோபர் 4ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் படம் 25 நாள்கள் நிறைவடைந்த நிலையில் அதன் படப்பிடிப்பு பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தயாரிப்பு தரப்புக்கும் இந்த விஷயம் நல்லாவே தெரியும்.
இன்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவரா இருக்கும் முரளி ராமசாமி விஜயிடம் கால்ஷீட் கேட்டு பல வருடங்களாக முயற்சி பண்ணுகிறார். ஆனால் அவருக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. காரணம் மெர்சல் படத்தின் போது நடந்த சில கசப்பான சம்பவங்கள் தான். அதன் காழ்ப்புணர்ச்சியில் அவர் செய்கிறாரோ என்றால் அது மேலோட்டமாகத் தான் தோன்றும்.
ஆனால் ஆழமாக சிந்தித்தால் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை அறிவித்து தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். அது ஆளும் அரசான திமுகவுக்கு விஜயின் வருகை நிச்சயமாக எரிச்சலைக் கொடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சூழலில் விஜய் 69 எவ்வித இடையூறும் இல்லாமல் நடந்தால் அவர் படத்தை முடித்து விட்டு அரசியலுக்கு வந்து விடுவார்.
அதனால் திமுக இந்த ஸ்டிரைக்குக்கு முரளி ராமசாமியை தூண்டி விட்டுள்ளார்களோ என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு வாய்ப்பும் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் இந்த ஸ்டிரைக்கு நாங்க மட்டும் முன்னெடுக்கல. அரசாங்கமே ஆதரவு கொடுக்கிறது என்கிறார்கள். தயாரிப்பாளர்கள் நலன் தான் அரசுக்கு முக்கியம் என்றால் பல்வேறு விஷயங்களை அது செய்திருக்க வேண்டும்.
ஏன்னா சிறு முதலீட்டாளர்களுக்கு மானியமே கொடுக்கவில்லை. அவர்களது நோக்கம் அரசியல்வாதியான விஜயை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுதான். இது உண்மையாக இருந்தால் அது அரசுக்குத் தான் பலவீனம். மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.