விஜய் 69 ல இது அப்டேட்டுக்கு அப்டேட்...! அது மட்டும் நடந்தா?

by sankaran v |   ( Updated:2024-09-14 07:41:22  )
v69
X

v69

விஜய் 69 படத்தைப் பற்றி இன்று 5 மணிக்கு ஒரு அப்டேட் வருகிறதாம். அதுல என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியல. முன்னதாக நேற்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டது. இதுல ரசிகர்கள் எல்லாரும் தங்களது மனக்குமுறலைக் கொட்டி இருந்தாங்க. விஜய் படத்தின் பெயரையே ப்ரண்ட்ஸ் சலூன் என ஒரு கடைக்காரர் வைத்து இருந்தார்.

அதே போல விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் அனைவரும் இதை ரொம்ப கொண்டாடணும். அதன்பிறகு இந்தக் கல்சரே முடிந்தது போல் ஆகிவிடும். திரும்ப 69 படங்களையும் ரி ரீலிஸ் செய்து பார்க்க வேண்டியது தான் என்றார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு என்பதைப் பார்க்க முடிந்தது.

vijay

vijay

ஒருவர் கொரோனா பீரியடுல எல்லாருமே தியேட்டரை மூடியிருந்தாங்க. திரையுலகமே அவ்வளவுதான் என ஸ்தம்பித்துப் போனது. அந்த நேரத்துல கைகொடுத்து தூக்கி விட்டவர் விஜய் தான். ரசிகர்கள் இருக்காங்க. தைரியமாகப் படத்தை வெளியிடுங்கன்னு மாஸ்டர் படம் விட்டாரு. படம் பட்டையைக் கிளப்பியது.

விஜய் 69 படத்தைப் பற்றி இன்று 5 மணிக்கு ஒரு அப்டேட் வருகிறதாம். அதுல என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியல. முக்கியமா கதாநாயகி சம்பந்தமா வதந்திகள்; வருது. சிம்ரன், சமந்தா நடிக்கப் போறதா சொன்னாங்க. ஏற்கனவே மமிதா பைஜின்னு சொன்னாங்க. இப்போ லேட்டஸ்டா பூஜா ஹெக்டேவை சொல்றாங்க.

ஏற்கனவே பீஸ்ட், சூர்யா 44 கார்த்திக் சுப்புராஜ், காஞ்சனா 4 எடுக்கப் போறாரு. எல்லாத்துலயும் இவங்க தான் ஹீரோ. அதுவும் இல்லாம விஜய் 69 படத்தோட வில்லனா கங்குவா வில்லன் பாபி தியோல்நடிக்கப் போறாராம்.

அக்டோபர் 3ம் தேதி படத்துக்கு சூட்டிங் ஆரம்பிக்கப் போறாங்களாம். பையனூர்ல செட் ஒர்க் நடந்து கொண்டும் இருக்கிறதாம். படத்தோட ரிலீஸ் அடுத்த அக்டோபர்னும் தகவல்கள் வருகிறது. விஜய் இந்தப் படத்துக்கு நிறைய நாள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாராம். முதல் கட்டப்படப்பிடிப்பில் பாடல்காட்சி எடுக்கப்படுவதாகவும் தகவலகள் வந்துள்ளன. அனிருத் தான் இந்தப் படத்துக்கும் இசை அமைப்பாளர்.

Also read: நடிகைகளை அசிங்கமா பேசுறாரு… அந்த யூடியூபர் கைது பண்ணுங்க… ரோகிணி புகார்…

டெக்னீஷியன், ஆர்டிஸ்ட் தேர்வுகளும் நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப் இ ராகவ்ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ராகவன், பிரவின்.கே வோட அசிஸ்டண்ட். இப்போ முக்கால்வாசி படங்கள்ல அவரு தான் ஒர்க் பண்ணி வருகிறாராம்.

கதகளி, கோமாளி, லவ்டுடேன்னு பல படங்களுக்கு ஒளிப்பதிவு இவர் தான். அனல் அரசு தான் ஸ்டண்ட் மாஸ்டர். எச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படம் விஜய்க்கு மாஸ் ஹிட்டாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story