காலம் என்னை கொண்டு போகும்!... அரசியல் குறித்து விஜய் அப்போதே இப்படி பேசி இருக்காருப்பா!.. உண்மை தான் போல

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் சில பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு விஜய் சொல்லி இருக்கும் பதில் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெற்ரிகரமாக அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார். தான் ஒப்புக்கொண்ட படத்தினை முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வருவேன் என்றும், தன்னுடைய கட்சி பெயராக தமிழக வெற்றி கழகத்தினையும் அறிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயுடன் நடிக்க மாட்டேன்!.. கண்டிஷன் போட்டு நடிக்க வந்த ஷகீலா.. அட அந்த படமா!..

அதுகுறித்து, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னுடைய தாய், தந்தைக்கு பின்னர் எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாரும் கொடுத்த தமிழக மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில் எதுவும் செய்ய வேண்டும் என்பதே என் நீண்டகால எண்ணம் மற்றும் விருப்பமாக இருந்தது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், சில காலம் முன்னர் விஜய் கலந்துக்கொண்ட ஒரு பேட்டியில் நீங்க அரசியலுக்கு வருவீர்களா? வந்தால் எந்த கட்சியில் இணைவீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய், என்னுடைய மொத்த கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது. நான் நடிகனாக ஆசைப்பட்டேன். மக்கள் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து வைப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை. அது நடந்தது.

இதையும் படிங்க: 1972 முதல் 2024 வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்! எல்லாரையும் நம்பியாச்சு.. இவரையும் நம்புவோம்

காலம் என்னை கொண்டு வந்து வைத்தது. அப்படி ஒரு காலம் வரும் போது அரசியல் எண்ட்ரியும் நடக்கும். ஆனால் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அரசியல் மீது விருப்பம் இருக்கிறது. அதில் உறுதியாக இருக்கேன். ஆனா அதுக்கான நேரம் இது கிடையாது. நேரம் வரும் போது நான் வருவேன்.

அப்போ நான் வருவேன். இது அதுக்கான நேரம் இல்லை. பில்டப் செய்து எழுதுவதால் வர முடியாது. என்னுடைய பேஸை வலுப்படுத்தணும். ரசிகர் மன்றத்தினை மக்கள் இயக்கமாக மாற்றி வலுப்படுத்திக்கொண்டே இருக்கேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படி அவர் சொல்லியது போலவே இன்று அதற்கான அறிவிப்பு வந்துவிட்டது என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=6BMmBY3u14A

 

Related Articles

Next Story