Connect with us
vijay

Cinema News

வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தளபதி? அதுவும் இந்த மாஸ் இயக்குனருடன்!

தளபதி விஜய் பெரும்பாலும் கமர்சியல் கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். மாஸ் ஹீரோக்கள் எப்போதுமே கமர்சியல் படங்களைத்தான் விரும்புவதுண்டு. அப்போதுதான் படங்களில் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

தளபதி விஜய்யும் இப்படித்தான் கடந்த பல வருடங்களாகவே கமர்சியல் படங்களில் அதிகமாக நடித்து, தனது படங்களின் வசூலையும் டாப்பில் வைத்துள்ளார். இதன் காரணமாகவே இவரை வைத்து படம் எடுக்க தமிழ் மட்டுமல்லாது பிற மொழியைச்சேர்ந்த தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் விஜய்யுடன் நாயகியாக முதன்முறையாக ஜோடி சேருகிறார் பூஜா ஹெக்டே.

shankar

shankar

இப்படத்தின் படப்பிடப்பிப்பு சென்னை, டெல்லி உட்பட இந்தியாவில் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கத்தி, மாஸ்டர் படங்களைத்த்தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன் இப்படத்தின்மூலம் வில்லனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தையடுத்து விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாக உள்ளது. இப்படத்தையடுத்து விஜய் ஒரு வரலாற்றுப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதுவரை விஜய் எந்தவொரு வரலாற்றுப்படத்திலும் நடிக்க வில்லை என்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளாராம். இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top