தளபதி 69 படம் டிராப்பா?!.. கோட் முடிஞ்சவுடனே நேரா அரசியலா?!.. என்னதாம்பா நடக்குது!..

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவடையவிருக்கிறது. இந்த படத்தில் விஜயோடு சேர்ந்து பிரபுதேவா, பிரசாந்த் என பலரும் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் 20 வயது வாலிபர் மற்றும் அப்பா விஜய் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இப்படம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஸ்டுடியோவில் ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: தொட்டதெல்லாம் டிராப்!.. இப்படியே போனா சூர்யா நிலைமை என்னாகுறது!.. அப்செட்டில் ரசிகர்கள்..

பொதுவாக விஜய் ஒரு படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடையும் போது தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்குவார். அப்படித்தான் கோட் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்தநிலையில் தனது அடுத்த பட இயக்குனர் ஹெச்.வினோத் என்பதை முடிவு செய்தார்.

தயாரிப்பாளராக ஒரு நிறுவனத்தின் பெயர் அடிபட்டது. ஆனால், சில காரணங்களால் விஜய் தயாரிப்பாளரை மாற்றினார். கே.வி.என் என்கிற நிறுவனம்தான் விஜயின் 69வது படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே கோட் படத்திற்கு பின் அடுத்து நடிக்கும் படம் முடிந்தபின் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் அறிவித்திருக்கிறார்.

goat

goat

இந்நிலையில், தளபதி 69 படம் டிராப். கோட் படம் முடிந்தவுடனேயே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என ஒரு செய்தி கிளம்பி இருக்கிறது. ஆனால், அப்படி இருக்க வாய்ப்பில்லை. விஜய் அடுத்த படத்தில் நடிப்பது உறுதி. இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிப்பது உறுதி எனவும் சில சொல்கிறார்கள்.

அனேகமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் ஒரு அரசியல் தொடர்பான கதை எனவும் சொல்லப்படுகிறது. விஜயின் அடுத்த படத்தை அவரின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

Related Articles

Next Story