வனிதாவுக்கு அட்வைஸ் பண்ண விஜய்.... எந்த விஷயத்துல தெரியுமா?....
இப்ப உள்ள பெண்களில் பொதுவாக சில பேர் ஒரு சில விஷயங்களுக்காக குரல் கொடுக்காமல் அப்படியே முடங்கி போய்விடுகின்றனர். யார் என்ன சொல்வார்கள் என்ன செய்வார்கள் என்ற பயத்திலயே இருந்து விடுகின்றனர். தப்போ சரியோ மனதில் பட்டதை சொன்னால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து விடலாம்.
இந்த நோக்கில் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்ப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் ஏராளம். அதையெல்லாம் தாண்டி இன்னைக்கு ஒரு ஃபேஷன் டிசைனராக சொந்தமாக காலூன்றி இருக்கிறார். இவரின் பேச்சு காரசாரமாகத்தான் இருக்கும். இவர் வந்தாலே பத்திக்கிச்சு என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள்.
இதையும் படிங்கள் :உன்னோட அந்த ரெண்டுக்கும் நாங்க அடிமை…ஐஸ்வர்யா மேனனிடம் உருகும் ரசிகர்கள்..
இவர் இன்னைக்கு இப்படி என்றால் ஆரம்ப காலங்களில் ரொம்பவும் பயந்த சுபாவத்துடன் தான் இருப்பாராம். ஒரு சமயம் இவரை பற்றி பத்திரிக்கை ஒன்றில் தப்பா எழுத அதைப் படித்து அழுதுகொண்டு இருந்தாராம். அப்பொழுது நடிகர் சஞ்சீவ் இவரது கஸின் பிரதராம். ஆகையால் இவரை வைத்து விஜய் வனிதா நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததாம்.
அந்த சமயம் விஜய் வந்தாராம் வனிதா வீட்டுக்கு. அவர் அழுது கொண்டிருக்க அவருக்க அட்வைஸ் பண்ணாராம் உன்ன பத்தி எழுதுறாங்கனா உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்காங்கனு அர்த்தம் உன்ன பத்தி எழுதலனா நீ செத்துட்டனு அர்த்தம்னு அட்வைஸ் பண்ணாராம். அதிலிருந்து அவர் அந்த ஆட்டிட்யூட்டையே விட்டாராம்.