Categories: latest news

இன்னொரு கதை ரெடி பண்ணுங்க: விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கி கோலிவுட் டாப் நட்சத்திரங்களை தன் பக்கம் ஈர்த்தவர் நெல்சன். அடுத்தாக எடுத்த சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் டாக்டர் படம் வசூலில் சாதனை படைத்தது.

டாக்டர் படம் ஒரு பக்கம் முடிந்த நிலையில், நெல்சன் , தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார் . அதேநேரம் நெல்சனுடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று விஜய் விரும்புகிறார் . ‘எனக்காக இன்னொரு கதை பண்ணுங்க…’ என நெல்சனிடம் சொல்லியிருக்கிறார் விஜய்.

vijay-nelson

இதனிடையே நெல்சனும் சிவகார்த்திகேயனும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால், ‘டாக்டர்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைய உள்ளது, சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை முடித்துவிட்டு, விஜய் படத்திற்கு கதையை உருவாக்க உள்ளாராம் நெல்சன். நெல்சன் காட்டில் மழை அல்ல… அடைமழை..

Published by
adminram