விஜய், அஜித்,கமல், ரஜினி சுய நலம் பிடித்தவர்களா...? தப்பிக்க ஒரே வழி..! சொல்கிறார் மூத்த பத்திரிக்கையாளர்...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக மட்டுமில்லாமல் தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை போட்டு யாரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு இடத்தை பிடித்தவர்கள் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித். 80களில் ஆரம்பித்த விளையாட்டு இன்றளவும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினி, கமலின் அந்த பிரம்மாண்டத்தை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இவர்களின் தலைமுறைக்கு அடுத்து ராம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களும் தங்கள் திறமையை அடுத்த அடுத்த படங்களின் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.
இவர்கள் மார்க்கெட்டை இன்று வரை யாராலும் எட்டி பிடிக்க முடியவில்லை. ஆண்டுதோறும் தங்கள் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைப்பது போல சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள்.இது ஒரு புறம் இருக்க இவர்களின் மார்க்கெட்டை அறிந்து தயாரிப்பாளர்களும் பணங்களை வாரி வாரி இறைக்கிறார்கள். படம் வெற்றியோ தோல்வியோ எப்படி இருந்தாலும் அவர்களுக்கு போக வேண்டிய சம்பளம் சரியாக போய் சேரவேண்டும்.
அதுவும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களே இவர்கள் தான். இது தான் தற்போதைய தமிழ் சினிமாவில் நிலைமை. ஆனால் அண்மையில் வெளிவந்த கே.ஜி.எஃப் படத்தின் பட்ஜெட், வசூல் சாதனை, தாக்கம் இதையெல்லாம் ஏற்கெனவே நாம் அறிந்த ஒன்று. கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. என்னவெனில் படத்திற்கு நடிகர்கள் முக்கியமில்லை கதை தான் முக்கியம், ஒரு நல்ல கதை இருந்தால் 10 விஜய் வந்தால் கூட அந்த படம் நன்றாக ஓடும் என்பதாகும் யாருனே தெரியாத நடிகர் யாஷ் இன்னைக்கு உலக அரங்கில் ஒரு வல்லமை படைத்த நடிகராக இருக்கின்றார் என்றால் எது காரணம்?. மேலும் சம்பளப் பிரச்சினை தான் தமிழ் சினிமாவின் தலையாய பிரச்சினையாகும்.
ஆனால் அந்த படத்தில் மட்டுமில்லாமல் மற்ற மொழிப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் சம்பள பிரச்சினையை பெரிதாக நினைப்பவர்கள் இல்லையாம். முதலில் படம் நன்றாக போகவேண்டும் அதன்பிறகு மற்றவை பார்த்துக்கலாம் என்ற மன நிலையில்தான் உள்ளார்களாம்.ஆனால் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றோர் நமக்கு சேர வேண்டியது முதலில் நம்மை வந்து சேர வேண்டும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமோ இல்லையோ நம்ம பணம் நமக்கு வரனும் என்ற எண்ணத்தில் இருப்பதால் தான் தமிழ் சினிமா இன்னும் மாறாமல் இருக்கிறது. இவர்கள் மாறினால் ஒழிய நாமும் உலக அரங்கில் ஒரு நல்ல நிலைமைக்கு தள்ளப்படுவோம் என வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்தார்.இதிலிருந்து அவர்கள் சுய நலவாதிகள் என்று சொல்ல வருகிறாரோ இல்லையோ? தெரியவில்லை.