More
Categories: Cinema News latest news

விஜய், அஜித் படம் பண்ணுறதெல்லாம் விஷயமா? அப்புறம் எதுக்கு கதை சொல்ல போனீரு… கலாய்க்கும் ரசிகர்கள்…

Karthik Subbaraj: வித்தியாசமான கதைகளால் ஹிட்டடித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கும் கருத்தால் ரசிகர்களிடம் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்ன பட்ஜெட்டில் பிட்சா படத்தினை இயக்கி சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக கோலிவுட்டில் படம் வாய்ப்பு கிடைக்க தன்னுடைய கனவு படமான ஜிகர்தண்டா படத்தினை இயக்க முடிவெடுத்தார். அப்படத்தில் சேதுவாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

இதையும் படிங்க: எத்தனை படத்தை ஓகே பண்ணுவீங்க கவின்… லிஸ்ட்டில் இணைந்த ஜில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்…

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை எழுதி ஹிட்டடித்தவர். சமீபத்தில் கூட லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை இயக்கி இருந்தார். அப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் கதை, பின்னணி இசை, லாரன்ஸின் நடிப்பு என அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜுன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் விகடன் விருது விழாவில் பின்னணி இசை, இயக்குனர் உள்ளிட்ட விருதுகளை பெற்றது. அந்த விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், என்னை பொறுத்தவரை அஜித், விஜய் படங்களை இயக்குவது ஒரு நல்ல இயக்குனரின் குறிக்கோள் இல்லை. அப்படங்கள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை.

இதையும் படிங்க: இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்க சென்னைக்கு வந்த சூரி! அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

பேட்ட படங்களுக்கு பிறகு தலைவருக்கு (ரஜினிகாந்த்) நிறைய கதைகள் சொல்லி இருந்தேன். அது அவருக்கு செட்டாகவில்லை. தற்போது தான் அவர் தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இனிமே அவருக்கும் கதை சொல்லுவேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் 44வது படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். தளபதி69 படத்தினை இயக்கும் ரேஸில் இருந்து கார்த்திக் சுப்புராஜ் விலகி இருக்கும் நிலையில் அவர் இப்படி குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களிடம் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

Published by
Akhilan