காத்துவாக்குல சொல்லிட்டு போவோம்.. பாக்கவா போறாங்கே!..விஜய் அஜித்தை சீண்டி பார்க்கும் நம்ம பெருசு!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். சமீபத்தில் இந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் க்ளாஷ் ஆகியது. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.
இவ்விரண்டு படங்கள் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்ததில் இருந்து இவர்களை பற்றிய ஏராளமான செய்திகள் இணையத்தில் பரவ தொடங்கியது. அஜித், விஜய் இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே பட போஸ்டரை ஒட்டி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதற்கிடையில் மீண்டும் இவர்களை வைத்து படம் எடுப்பேன் என்று எப்பவோ வெங்கட் பிரபு சொன்ன தகவல் வெளியாகி கொண்டிருந்தது.
மேலும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக படம் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள், என் மகன் தான் இயக்கப் போகிறான், அதற்கான அப்டேட்டை விரைவில் வெளியாகும், அது ஒரு பேன் இந்தியா படமாக உருவாக போகிறது என்று காத்துவாக்குல சொல்லிவிட்டு போனார் கங்கை அமரன். அந்த செய்தி மிகவும் வைரலானது. இதனால் வெங்கட் பிரபுவிற்கும் சின்ன உருத்தல் இருந்தது. ஊடகங்களும் இது சம்பந்தப்பட்ட நடிகர்கள் எதுவும் சொல்லாத நிலையில் கங்கை அமரன் இப்படி சொல்லியிருப்பது சரியா என்ற பேச்சும் எழுந்தது. மேலும் இந்த விஷயம் அஜித் விஜயையும் பாதிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறிவந்தார்கள்.
இதையும் படிங்க : சிகரெட் இல்லாமல் தவித்த நாகேஷ்!.. படக்குழுவை அல்லோலப்பட வைத்த சம்பவம்.. மெய்யப்பச்செட்டியார் எடுத்த திடீர் முடிவு..
இந்த நிலையில் இன்று பேட்டியாளர்களை சந்தித்த கங்கை அமரன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யாரும் திருட வேண்டாம் எனவும் வேண்டுமென்றால் நடிகர் திலகம், புரட்சித்தலைவர் என்ற பட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அதன் சொந்தக்காரர்கள் நம்மிடம் இப்போது இல்லை, ஆனால் சூப்பர் ஸ்டார் படத்திற்குரியவர் இருக்கிறார் என்று கூறினார்.
மேலும் விஜய் அஜித் பற்றி கேட்கையில் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வதில்லை. இப்ப கூட விடுமுறை கழிப்பதற்காக இரு குடும்பங்களும் சேர்ந்து தான் துபாய் சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறி ஏற்கெனவே துபாயில் அவர்கள் இருவரையும் குடும்பத்துடன் சந்தித்திருக்கிறேன். வழக்கமாக விடுமுறைக்காக அங்கு தான் செல்வார்கள் என்று வாய்க்கு வந்தப்படி கூறினார் கங்கை அமரன்.