தளபதி விஜய் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வர முடிவெடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியையும் தொடங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் விரைவில் அந்த படத்தை ரிலீஸ் செய்துவிட்டு எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69-வது படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், விஜய்யை அரசியல் கட்சிகள் சீண்டாமல் இருப்பதே இப்போதைக்கு நல்லது என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார். சினிமா பற்றிய பல விஷயங்களை மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தொடர்ந்து பேட்டி மூலமாக தெரிவித்து வருகிறார்.
இதையும் படிங்க: திரை உலகைக் கலக்கப் போகும் இன்றைய படங்கள்… ஜெயிக்கப் போவது யாரு?
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் மிகப்பெரிய சக்தியாக மாறியுள்ளார். அந்த மாநிலத்திலேயே அவரது கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக தற்போது உருவெடுத்துள்ளது. இதுவரை முதல்வராக ஆட்சி செய்து வந்த ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் முதல்வராக மாறும் வாய்ப்பே இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யை இங்குள்ள அரசியல் தலைவர்கள் சீண்டாமல் இருப்பதே நல்லது என்றும் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தால் பவன் கல்யாண் போல அவரும் தனது ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி விஸ்வரூபம் எடுப்பார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இவ்ளோ சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா? மனைவி சொன்ன சீக்ரெட்.. அட கடவுளே
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களையும் பிடித்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் எந்த மாதிரியான திட்டங்களுடன் அரசியல் களம் காண போகிறார் என்கிற கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், விஜய்யை லேசாக நினைத்து அவரிடம் வம்பு இழுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…