பிறந்தநாளின் போது விஜய் எங்கு இருந்தாலும் இங்கு வந்து விடுவார்.. அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு!..

by Rohini |   ( Updated:2023-04-03 06:37:36  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வரும் விஜய் தற்போது லியோ படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கு முன் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் ரசிகர்களை பூர்த்தி செய்யாத நிலையில் லியோ படம் பெரும் எதிர்பார்ப்போடு தயாராகி கொண்டு வருகிறது.

ஷாக் கொடுத்த விஜய்

ரசிகர்களும் லோகேஷை முழுவதுமாக நம்பியிருக்கின்றனர். விஜயும் சமீபகாலமாக ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் திருப்தி படுத்தி கொண்டு வருகின்றார். திடீரென ரசிகர் மன்ற செயலாளர்களை அழைத்து அவ்வப்போது கூட்டம் போட்டு விருந்து வைக்கிறார். போதாதற்கு நேற்று இன்ஸ்டாவில் புதியதாக கணக்கை தொடங்கி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் லோகேஷ் ஒரு பக்கம் லியோ படத்தின் அப்டேட் பற்றி எதாவது ஒரு விஷயத்தை போற போக்குல சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அதுமட்டுமில்லாமல் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி ஒரு வெயிட்டான அப்டேட் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது என படத்தின் தயாரிப்பாளர் லலித் அண்மையில் ஒரு விழாவில்
கூறினார்.

விஜய் செல்லக்கூடிய இடம்

விஜயின் பிறந்த நாள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல் தான். ஆனால் அதே பிறந்த நாளில் விஜய் செல்ல கூடிய இடம் எது தெரியுமா? எழும்பூரில் இருக்கும் தாய்சேய் அரசு மருத்துவமனையாம். அங்கு தான் விஜய் பிறந்தாராம். ஆரம்பத்தில் ரொம்பவும் மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்திருக்கிறது விஜயின் குடும்பம்.

தாய் ஷோபனாவிற்கு பிரசவவலி வர கூட யாருமில்லையாம் அந்த நேரத்தில். அப்போது ஷோபனா வெளியில் வந்து அவரே ரிக்‌ஷா பிடித்து மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அதன் பிறகே விஷயம் தெரிந்து ஷோபனாவின் சகோதரியான விக்ராந்தின் அம்மா அங்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் கைப்பேசி வசதி இல்லாத காரணத்தால் எளிதாக யாரையும் அணுக முடியவில்லையாம்.

இதையும் படிங்க : வெற்றிமாறனை முதுகில் குத்திய பிரபல இசையமைப்பாளர்… அன்னைக்கு மட்டும் அது நடந்திருந்ததுன்னா!!

அப்படி பிறந்தவர் தானாம் விஜய். அதை மனதில் வைத்து ஒவ்வொரு பிறந்த நாளின் போது அந்த மருத்துவமனையில் அன்று பிறக்கின்ற குழந்தைகளுக்கு தன் கையாலேயே தங்க மோதிரத்தை அணிவித்து மகிழ்வாராம் விஜய். இது 2011 ஆம் ஆண்டு வரை நடந்திருக்கிறது. அதன் பிறகு விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக ஆன பிறகு ரசிகர்களின் ஆரவாரத்தால் அவரால் நேரில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லையாம். தன் உதவியாளர்களை அனுப்பி அந்த செயலை செய்து வருகிறாராம்.

Next Story