‘ஜெய்லர்’ ஆரம்பத்தில் இருந்து ரிலீஸ் வரைக்கும் விஜய் இததான் சொன்னாரு! முதல் முறையாக நெல்சன் ஓப்பன் டாக்

Published on: August 12, 2023
nelson
---Advertisement---

ரஜினி நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் ஜெய்லர் படம் மூன்றாவது நாளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக பார்த்து ரசிக்கக் கூடிய படமாக மாறியிருக்கிறது  ஜெய்லர்.

நெல்சனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு இது டபுள் டமாக்காவாக மாறிவிட்டது. ரஜினி படம் என்பதையும் தாண்டி நெல்சன் படம் என அனைவரும் படம் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : கமல், விக்ரம் பாணியை ஃபாலோ பண்ணும் விஜய் சேதுபதி.. இனிமே அப்படி செய்ய மாட்டாராம்..

இந்த நிலையில் தனது வெற்றிக் களிப்பை பல பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார் நெல்சன். பீஸ்ட் படம் தோல்வி நெல்சனை மனதளவில் பாதித்து விட்டதாம். உடனே விஜய்க்கும் போன் செய்து சார் என் மேல் எதுவும் கோபமாக இருக்கிறீர்களா? என்று கூட நெல்சன் கேட்டாராம்.

ஆனால் விஜய் இவ்ளோதான் என்னை பத்தி நினைச்சதா? உனக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் ஒரு படம் மட்டும்தானா? அது வேற இது வேற. நீ ஒன்னு நினைச்சு எடுத்த. நடிச்சாச்சு. ஒரு சில பேருக்கு பிடிக்கும். ஒரு சில பேருக்கு பிடிக்காது. அடுத்த முறை சரியாக பயன்படுத்திக் கொள்வோம் என மனதில் இருந்து சொன்னாராம் விஜய்.

மேலும் பீஸ்ட் வேலை போகும் போதிலிருந்தே நெல்சனுக்கு ஜெய்லர் பட வாய்ப்பு வந்ததாகவும் தைரியமாக பண்ணு, ரஜினி சார் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார், நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் சொன்னவர் விஜய் தானாம்.

இதையும் படிங்க : 1000 பெரியாரை கண்முன் நிறுத்திய பாலா – கோயிலுக்கு வெளியே இருந்த பிச்சைக்காரனை அழைத்து என்ன செய்தார் தெரியுமா

அதே போல் ஜெய்லர் படம் ரிலீஸாகி நல்ல விமர்சனம் வந்ததும் முதல் ஆளாக போன் செய்து ‘ all the best, good for you, and happy for you’ என்று மனதார வாழ்த்தினாராம். இதை நெல்சன் பேட்டியில் கூறும் போது ஆரம்பத்தில் இருந்து முடியும் வரைக்கும் விஜய் சார் இப்படியே தான் சொல்லிக் கொண்டிருந்தார் என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.