லியோ படத்துலயே அந்த ரெண்டு பேரோட போர்ஷன் தெறிக்கவிடும்!.. இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்!..

இன்னும் ஒன்பது நாள் தான் லியோ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தெறிக்க விடப் போகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை ரிஸ்க் எடுக்காத அளவுக்கு விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

லியோ படத்துக்கு பெரிய அளவில் எந்த ஒரு புரமோஷனும் செய்யாத நிலையில், அந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இயக்குனர் லோகேஷ் மற்றும் ஆடை படத்தின் இயக்குனரும் லியோ படத்தின் துணைக் கதாசிரியரான ரத்னகுமார் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: கலர் கலரா பேனா வச்சிருந்தும் கதை வர மாட்டுதே!.. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்த செல்வராகவன்!..

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் இதுவரை நடித்துள்ள 67 படங்களில் டாப் 3 பெஸ்ட் படங்களில் லியோ கண்டிப்பாக இடம்பெறும் எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் விஜய் இடையே நடைபெறும் அந்த டயலாக் போர்ஷன் இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்றும் பக்காவான அப்டேட் சொல்லியுள்ளார்.

இதையும் படிங்க: பழைய விஜய் ரீ எண்ட்ரியா?.. தரமான சம்பவத்துக்கு ரெடி ஆன தளபதி!.. பலே ஆளுயா வெங்கட்பிரபு!..

மேலும், மன்சூர் அலிகானின் என்ட்ரி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் விதத்தில் தாறுமாறாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிற தரமான அப்டேட்டை கொடுத்துள்ளார் ரத்ன குமார்.

தமிழ்நாட்டை தாண்டி கடைசி வரை லியோ படத்தை புரமோட் செய்யவில்லை என்றால் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அந்த அளவுக்கு கூட வசூல் வராது என்று ரசிகர்களே சொல்லி வரும் நிலையில், லியோ படக்குழு லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் பேட்டிகளை மட்டுமே ஓட்டிக் கொண்டிருப்பது எந்த வகையில் கை கொடுக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

 

Related Articles

Next Story