அஜித் விஜய் தவறவிட்ட இரண்டு சூப்பர் ஹிட் படங்கள்.... நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்......
சமீபகாலமாகவே முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க தவறிய படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் ஏராளமான வெற்றி படங்களை தவறவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் அஜித்தும் ஒரு சில படங்களை தவறவிட்டுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் தவறவிட்ட இரண்டு வெற்றி படங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு பாலிவுட் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற படம் தான் ஜீன்ஸ். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தானாம். ஆனால் சில காரணங்களால் இவரால் நடிக்க முடியாமல் போகவே பிரசாந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதேபோல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றி பெற்ற படம் தான் சிங்கம். இந்த படத்தில் முதலில் தளபதி விஜய் தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதால் சூர்யா நடித்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கம் படம் மாபெரும் வெற்றி பெறவே இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகி அதுவும் நல்ல வெற்றியை பெற்றது. நடிகர் சூர்யாவிற்கு சிங்கம் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு இப்படம் அவருக்கு ஒரு மாஸ் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் விஜய் ஆகிய இருவரும் தவறவிட்ட இந்த இரண்டு படங்களுமே நல்ல படங்கள் தான். உண்மையை கூற வேண்டுமானால் இந்த படங்களில் நடித்த பின்னர் தான் பிரசாந்த் மற்றும் சூர்யாவின் மார்க்கெட் சற்று உயர தொடங்கியது. ஒருவேளை அஜித் மற்றும் விஜய் இந்த படங்களில் நடித்திருந்தால் மேலும் ஒரு வெற்றி படம் அவர்களின் பட்டியலில் இணைந்திருக்கும்.