தளபதி விஜய் செய்யாததை தல அஜித் அடிக்கடி செய்கிறார்.! இத யாருமே எதிர்பார்க்கல.!
தல அஜித் எப்போதும் ஒரு பழக்கம் உண்டு அதாவது தன்னுடன் ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் ஒருவர் பயணிக்க தொடங்கினால் அவர்களிடம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பார். அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பார்.
விஜய் அதற்கு சற்று நேர்மாறு, புது புது இளம் இயக்குனர்கள், புதிய புதிய தயாரிப்பாளர்கள் என பயணிப்பார். அது அவருடைய பாணி.
அஜித் தனது தயாரிப்பளருக்கு அல்லது இயக்குனருக்கு தனது படத்தால் நஷ்டம் ஏற்பட்டால், உடனே அவர்களுடனே அடுத்த படத்திலும் நடித்து கொடுத்து அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவார். அப்படிதான் விவேகம் திரைப்படம் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் அதே சத்யஜோதி நிறுவனத்திற்கு சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து கொடுத்தார்.
இதையும் படியுங்களேன் - பீஸ்ட் படத்தில் கவினின் கெட்டப் என்ன.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!
அதே போல தான் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஓரளவுக்கு நல்ல லாபம் கொடுக்காத காரணத்தால், உடனே அடுத்தடுத்து 2 படங்கள் நடிக்க போனி கபூர் அஜித்தை கமிட் செய்துள்ளார்.
ஆனால், விஜய் அடுத்தடுத்து புது புது தயாரிப்பாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். அதன் காரணம் இன்னும் தெரியவில்லை. மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் சுமார் 1 வருடம் அந்த படம் ரிலீஸ் ஆகும் வரை காத்திருந்து விஜய்க்காக OTT நிறுவனம் பக்கம் போகாமல் தியேட்டரில் வெளியிட்டார்.
ஆனால், இன்னும் லலித் குமாருக்கு விஜய் அடுத்த படத்திற்கான தேதி கொடுக்கவில்லையாம். ஒரு வேலை அப்போதுள்ள விஜய் மார்க்கெட் ஏற்றவாறு சம்பளம் பேசிவிட்டு , தற்போதுள்ள மார்க்கெட் சம்பளத்தை கொடுக்க மறுகின்றனரா? அதனால் தான் விஜய் தேதி தர தாமதிக்கிறாரா என சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.