தமிழ் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிது இல்லை. சிலர் கணக்கு தவறினாலும், சிலர் அரசியலில் வெற்றி கண்டதும் உண்மை தான். இதில் அடுத்தக்கட்டமாக தமிழ் சினிமாவின் தூண்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பி.டி.செல்வகுமார்.
சினிமாவும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமானது. திரைப்படங்களில் வெற்றி கண்டவர்கள் அரசியலிலும் வென்றனர். இதில் முதல் எடுத்துக்காட்டாக, எம்.ஜி.ஆர். ஒரு காலத்தில் கோலிவிட்டின் கிங் மேக்கராக இருந்தவர். பின்னாட்களில் சூழ்நிலை காரணமாக அரசியலுக்கு வந்தார். பல போராட்டங்களை சந்தித்தார்.
பின்னர், ஆட்சிக்கட்டிலில் ஏறியவருக்கு கடைசி வரை இறக்கம் என்பதே இல்லை. அவரை தொடர்ந்து, உருவான புயல் தான் ஜெயலலிதா. அவரும் இருக்கும் வரை தனது ஆளுமையை பலருக்கு புரிய வைத்தே சென்றார்.
இதையும் படிங்க: மீண்டும் விஜய் – அஜித் மோதிக்கொள்வார்களா…? இல்லை பின்னனியில் இருக்கும் அரசியல் நாடகம் பலிக்குமா..?
இந்நிலையில், கோலிவுட்டில் வசூல் மன்னர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள் என பி.டி.செல்வகுமார் தெரிவித்து இருக்கிறார். விஜயிற்கு எல்லாமும் தெரியும். இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்து கொண்டு தான் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார்.
தலைவா படத்தின் போது திரையரங்கமே கிழிக்கப்பட்டது. தொடர்ந்து, பல பிரச்சனைகளை சந்திக்கும் பிரபலங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அதுபோல, விரைவில் விஜயும் அரசியலுக்கு வருவார். அவரை தொடர்ந்து, அஜித்தும் அரசியலுக்கு வருவார். அவரிடம் பழகி இருக்கிறேன். அதனால் சொல்கிறேன். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் எனத் தெரிவித்தார். இதை அவர்கள் வெளியுலகத்திற்கு இப்போது கூற தயங்குகின்றனர். அது அவர்களுக்கு பெரிய சர்ச்சையை உருவாக்கும் என்பதாலே இத்தனை தயக்கம் எனக் குறிப்பிட்டார்.