
Cinema News
விஜயின் மனசு அஜித்திற்கு வராதா.?! ஏக்கத்தில் ‘அந்த’ தொழிலாளர்கள்.!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம், விநியோகிஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், இசை கலைஞர்கள் சங்கம், FEFSI எனப்படும் தொழிலாளர் சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள் இருக்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இதில் தமிழ் சினிமாவில் ஓர் பழக்கம் உண்டு. எந்த படம் எடுக்க சென்றாலும், இந்த சங்க தொழிலார்களைதான் பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும் என்பது. ஆனால், பெரிய நட்சத்திரங்கள் சிலர் அதனை கண்டுகொள்வதில்லை.
ஆனால், தளபதி விஜய் தற்போது அதனை கருத்தில் கொண்டு ஓர் அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது, விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தான் தயாரிக்கிறார்.
முதலில் இப்படம் முழுக்க ஹைதிராபாத்தில் ஷூட்டிங் நடைபெறுவதாக இருந்ததாம். அப்படி நடந்திருந்தால், அங்குள்ள தெலுங்கு தொழிலாளர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்குள்ள தமிழ் தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்காது. ஆதலால், உடனே படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றிவிடுங்கள் என கூறவே, அடுத்து உடனே படக்குழு சென்னையில் செட் அமைத்து இங்குள்ள ஆட்களை வைத்து படவேலைகளை ஆரம்பித்தது தளபதி 66 படக்குழு.
இதையும் படியுங்களேன் – கமல்ஹாசனிடம் பூவா தலையா போட்டு பார்க்கும் சிவகார்த்திகேயன்.!? இது சரியா வராது.!
அஜித் நடித்த அண்மைக்கால திரைப்படங்கள் பெரும்பாலும் ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஷூட்டிங் செட்டில் தான் படமாக்கப்படுகிறதாம். நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம். வலிமை ஆகிய படங்களின் ஷூட்டிங் ஹைதிராபாத்தில் தான் நடைபெற்றதாம். ஒருவேளை, சென்னையில் ஷூட்டிங் நடந்தால், தன்னை பார்க்க ரசிகர்கள் நிரம்பி விடுவர். அதனால், ஷூட்டிங்கில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் எனவே, அதனை தவிர்த்திடுவோம் என அஜித் இப்படி செய்கிறாரா என தெரியாவில்லை.