More
Categories: Cinema News latest news

எங்க அண்ணன் அரசியலுக்கு போயிடுவாரு!.. எங்க அண்ணன் டூருக்கு போயிடுவாரு!.. அப்போ கோலிவுட் நிலைமை?..

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து கோட் மற்றும் தளபதி 69 எனக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என தெரிகிறது. அதன் பின்னர் முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகும் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பு விஜய் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்த்தினாலும் தமிழ்நாட்டுக்கு அடுத்த முதல்வர் தளபதி தான் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தும் இன்னும் இரண்டு படங்களை முடித்துவிட்டு வேர்ல்ட் டூருக்கு கிளம்பி விடுவார் என்றும் அவரும் சினிமாவை விட்டுவிட்டு தனது பேஷனை நோக்கி சென்றுவிட்டால் கோலிவுட்டை காப்பாற்ற போவது யார் என்கிற கேள்வி அஜித் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: புதுசா புதுசா காட்டுறியே பூஜா ஹெக்டே!.. ஜூம் பண்ணி பண்ணி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!..

சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் காட்சியை வைத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டு வரும் மீம்கள் வைரலாகி வருகின்றன. எங்க அண்ணன் அரசியலுக்குப் போய்விடுவார் என விஜய் ரசிகர்களும் எங்க அண்ணன் பைக் எடுத்துக்கிட்டு உலகம் முழுக்க சுத்த போயிடுவார் என அஜித் ரசிகர்களும் சொல்வது போன்ற மீம் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் உள்ளுக்குள் பயத்தையும் கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் இருபெரும் தூண்களாகவும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் இருக்கும் விஜய் மற்றும் அஜித் சினிமாவில் இருந்து விலகி விட்டால் சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் கையில்தான் அடுத்த கோலிவுட் இயங்க போகிறதா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோட் பட சூட்டிங்கில் விஜய்!.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!.. தளபதி லுக் எப்படி இருக்குன்னு பாருங்க!..

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு வயதாகி வரும் சூழலில் இன்னும் கொஞ்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களும் படங்களில் நடிக்க மாட்டார்கள் என்றும் எதிர்கால தமிழ் சினிமாவை காப்பாற்ற போவது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளன. ரசிகர்களை விட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் ரொம்பவே அப்செட்டாக உள்ளனர்.

 

Published by
Saranya M

Recent Posts