முதல்முறையாக விஜயுடன் இணையும் கமல்?!.. லியோ படத்தில் லோகேஷ் வைத்திருக்கும் தரமான சஸ்பென்ஸ்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகயுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், லியோ படம் 2 பாகங்களாக வெளியாகிறது என்ற தகவல் சில நாட்களாக பரவி வருகிறது. இரண்டாம் பாகத்திற்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பல தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- என்ன கதை வேணுனாலும் சொல்லிக்கோ! ‘லியோ’ ஆடியோ லாஞ்சில் விஜயிடம் எதிர்பார்ப்பது இதுதான்
அந்த பேட்டியில், லியோ படத்தின் பார்ட் 2 வருவது உண்மை தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த லியோ பார்ட் 2வை தயாரிப்பது லலித்குமார் மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து, கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து லியோ படத்தின் பார்ட் 2வை தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் சூர்யா ரோலெக்ஸ் என்ற ஒரு குட்டி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சூர்யா நடித்ததை கடைசி நேரம் வரை சஸ்பென்ஸாக படக்குழு வைத்திருந்தனர்.
ரோலெக்ஸ் கதாப்பாத்திரம் வேற லெவலில் இருந்தது. இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதே போல, லியோ படத்தின் பார்ட் 2விலும் கமலை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருவதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
லியோ பார்ட் 2வில் கமல் ஒரு குட்டி கதாப்பாத்திரத்திலாவது நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதை லோகேஷ் கனகராஜ் ரகசியமாக தான் வைத்திருப்பார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்தார்.
இதையும் படிங்க- லியோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டதே திசைத்திருப்ப தான்.. அட இப்படி ஒரு உள்குத்து இருக்கா?